கேரளா:லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அணிக்கு 17- இடதுசாரி அணிக்கு 3 - பாஜகவுக்கு 0- மனோரமா நியூஸ் சர்வே
திருவனந்தபுரம்: லோக்சபா சட்டசபை தேர்தல் 2024-ல் கேரளாவில் மொத்தம் உள்ள 20 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 17 இடங்களிலும் கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி 3 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்புள்ளது என்கிறது மனோரமா நியூஸ் கருத்து கணிப்புகள். 2024 தேர்தலில் கேரளாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது இக்கருத்து கணிப்பு.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. கேரளாவின் மனோரமா நியூஸ் மற்றும் மும்பையின் Voters Mood இணைந்து கேரளாவில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தின.

யாருக்கு எத்தனை இடம்?: இக்கருத்து கணிப்பின் முடிவுகள்: காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி 17 இடங்களில் வெல்லுமாம்; ஆளும் இடதுசாரிகளின் LDF கூட்டணி 3 இடங்களைக் கைப்பற்றுமாம். காங்கிரஸ் கூட்டணிக்கு 47.22% வாக்குகளும் இடதுசாரி கூட்டணிக்கு 37.47% வாக்குகளும் கிடைக்குமாம். பாஜக தலைமமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதாம். ஆனால் கேரளாவில் 15.50% வாக்குகளை பாஜக அணி பெறக் கூடுமாம். இதர கட்சிகளுக்கு 3.25% வாக்குகள் கிடைக்குமாம்.
காங்கிரஸ் அணி வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள்: காசர்கோடு, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பொன்னானி, சாலக்குடி, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம். கடும் போட்டியை எதிர்கொள்ளும் தொகுதிகள் கண்ணூர், ஆலத்தூர், திரிசூர், பத்தனம்திட்டா, அட்டிங்கல்
இடதுசாரி அணி வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள்: மாவேலிக்கர. கடும் போட்டியை எதிர்கொள்ளும் தொகுதிகள் வடகரா, பாலக்காடு.

எந்த தலைவருக்கு ஆதரவு?: கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 47.57% பேரும் பிரதமர் மோடிக்கு வெறும் 19.05% பேரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். முதல்வர் பினராயி விஜயனுக்கு 11.48% பேரும் காங்கிரஸின் கேரளா முகங்களில் ஒருவரான சசி தரூருக்கு 7.81% பேரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
கேரளா முதல்வர் பதவி: கேரளாவின் முதல்வர் பதவிக்கு பினராயி விஜயனுக்கு 27.5% ; சசி தரூருக்கு 14.45%; ஷைலஜாவுக்கு 14.37%; விடி சதீஷனுக்கு 8.75% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications