மகரஜோதி தரிசனம்: ஐயப்பனின் திருவாபரணத்தை தரிசித்த பக்தர்கள்.. விண்ணை முட்டிய சரண கோஷம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபாரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது.
சபரிமலை மகரஜோதி தரிசனம் நாளை நடைபெறவுள்ளது. தரிசனத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இன்றும், நாளையும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

நாளை காலை 7 மணி முதல் நிலக்கல்லில் இருந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே பம்பை வரை போக்குவரத்து இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 மணிக்குமேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சபரிமலை மகரஜோதி தரிசனத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலையில் டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி அதிகாலை 12 மணி வரை 7 லட்சத்து 25 ஆயிரத்து 261 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஜனவரி 13 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், 14 ஆம் தேதி 40 ஆயிரமாகவும், 15 ஆம் தேதி 5 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சபரிமலையில் ஜனவரி 14 ஆம் தேதி மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் ஜனவரி 14 ஆம் தேதி, மகர சங்கம பூஜையும், பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் சார்த்திய ஐயப்பனுக்கு மகா தீபாரதனையும் நடைபெறவுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் 1,800 போலீஸாரும், பம்பையில் 800 போலீஸாரும், நிலக்கல்லில் 700 போலீஸாரும், இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1,050 பேரும், கோட்டயத்தில் 650 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். இதனைக் காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக திருவாபரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பகல் 12:30 மணியளவில் திருவாபரண பவனி புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. பேழைகள் அடைக்கப்பட்டு கோவிலில் உச்ச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பந்தளம் ராஜ பிரதிநிதி ராஜராஜ வர்மாவுக்கு உடைவாள் வழங்கப்பட்டது. திருவாபரண பேழைகள் கங்காதரன் குருசாமி குழுவினரின் தலையில் ஏற்றப்பட்டது.
ஆபரண பேழைகள் வெளிவந்தபோது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டது. பக்தர்கள் சரண கோஷமிட்டனர். தொடர்ந்து, திருவாபரண பவனி புறப்பட்டது. சுத்தி கிரியைகள் நேற்று சன்னிதானத்தில் தொடங்கியது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் சுத்திகிரியை பூஜைகளை நடத்தினார். இன்று மதியம் உச்ச பூஜைக்கு முன்னால் பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறவுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications