தமிழ் நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் புகார்.. பரபரப்பை கிளப்பிய மலையாள நடிகை ரேவதி! அடுத்த ஷாக்
திருவனந்தபுரம்: தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
தற்போது மொத்த மலையாள திரையுலகமே அதிர்ந்து போய் நிற்கிறது. சினிமா துறையில் பாலியல் தொல்லை, அட்ஜெட்ஸ்ட்மெண்ட் தொடர்பான புகார்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. வாய்ப்பு வழங்குவதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள நடிகைகள் அழைக்கப்படுவதாக பல நடிகைகள் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கு மலையாள திரையுலகமும் விதிவிலக்கல்ல. மலையாள திரையுலகில் நடிகைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தியது. இந்த கமிஷன் அறிக்கை அரசிடம் கடந்த 2019ல் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கையில் உள்ள விபரங்கள் வெளியாகி அதிர வைத்து வருகின்றன.
அந்த அறிக்கையில், ‛‛மலையாள திரையுலகம் ஒரு 15 பேர் கொண்ட மாபியாக்களின் கையில் இருக்கிறது. அரை குறை ஆடையுடன் நடிக்க கட்டாயப்படுத்துவதாகவும் நெருக்கமான, முத்தமிடும் காட்சிகளை அதிக முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது'' எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்த ஐஜி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க மலையாள நடிகை ரேவதி சித்திக், மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டை நேற்று முன்வைத்தார். இதையடுத்து சித்திக் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகைய சூழலில் தான் சித்திக் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ரேவதி நடிகர் ரியாஸ் கான் மீது புகார் அளித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த ரியாஸ் கான் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருப்பார். அதேபோல் வின்னர் திரைப்படத்தில் இவர் ‛பாடிபில்டர்' ஆக கட்டத்துரை என்ற பெயரில் நடித்து அசத்தியிருப்பார்.
இந்நிலையில் தான் ரியாஸ் கான் மீது நடிகை ரேவதி சித்திக் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரேவதி சித்திக் கூறுகையில், ‛‛போட்டோகிராபர் ஒருவர் மூலம் எனது செல்போன் எண்ணை ரியாஸ் கான் வாங்கி உள்ளார். அதன்பிறகு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொண்டார். அதற்கு மறுத்ததால் தனக்கு அவரது தோழிகளை அறிமுகம் செய்து வைக்கும்படி கேட்டு கொண்டார். செல்போனில் அவர் ஆபாசமாக பேசி உள்ளார்'' என்றார்.
மேலும் சித்திக் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ரேவதி சம்பத் கூறுகையில், ‛‛சித்திக்கை திரைத்துறையில் இருந்தே ஓரம் கட்ட வேண்டும். கேரள அரசு பாதுகாப்பு அளித்தால் சித்திக்கிற்கு எதிராக புகார் அளிக்க முன்வருவேன். கேரளா திரையுலகில் பாலியல் தொல்லையால் நடிகைகள் பாதிக்கப்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்'' என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications