முதலில் அம்மாவை பலாத்காரம் செய்து.. பின்னர் மகளையும் ஏமாற்றி.. கேரளாவில் பிரபல இயக்குனர் கைது
திருவனந்தபுரம்: சினிமாவில் ஹீரோயின் சான்ஸ் தருவதாக கூறி முதலில் தாயை பாலியல் பலாத்காரம் செய்த இயக்குனர், பின்னர் மகளையும் பாலியல் தொல்லை செய்திருக்கிறார். ஏற்கனவே தாயை பலாத்காரம் செய்த காரணத்திற்காக சிறையில் இருந்த அவர், இப்போது மகளுக்காகவும் சிறைக்கு போகிறார்.
சினிமாவில் வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி இளம் பெண்களை பாலியல் வலைக்குள் வீழ்த்துவது அடிக்கடி நடக்கிறது. ஒத்துப்போகும் நடிகைகளுக்கு பட வாய்ப்பும், ஒத்துப்போகாத நடிகைகளுக்கு வாய்ப்பு தராமல் புறக்கணிப்பதும், சினிமா துறையில் அவ்வப்போது நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

சினிமாவில் நடித்து பெரிய ஆளாக வர விரும்பும் மாடலிங் பெண்களை சில இயக்குனர்கள் ஏமாற்றுவதும், அதற்காக கைதாவதும் நடக்கிறது. அப்படியான ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியைச் சேர்ந்த 36 வயதாகும் ஜாசிக் அலி என்பவர் மலையாள சினிமாவில் இயக்குனராக உள்ளார். இவர் மலையாளத்தில் பைனரி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.இந்த படம் கடந்த மே மாத இறுதியில் வெளியானது.
இந்நிலையில் ஜாசிக் அலி, கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஹீரோயின் ஆக்குகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். இளம்பெண்ணும் சினிமாவில் நடித்து பெரிய நடிகையாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் ஒப்புக்கொண்டாராம்,. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சினிமா காட்சிகள் எடுக்க வேண்டும் என கூறி இளம்பெண்ணை ஜாசிக் அலி கேரளாவில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளாராம்.
இந்நிலையில் லாட்ஜ் அறைக்குள் தங்கவைத்து அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால்
அங்கு விடுதிகளில் அறை எடுத்து தங்க வைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்து தனது தாயிடம் நடந்தது குறித்து கூறினார். பின்னர் இதுகுறித்து இளம்பெண் கோயிலாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கோயிலாண்டி போலீசார் தீவிரமாக தேடத்தொடங்கியதை அறிந்த இயக்குனர் ஜாசிக் அலி தலைமறைவானார். இந்நிலையில் நடக்காவு பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்ததின் பேரில் அங்கு சென்ற போலீசார், ஜாசிக் அலியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அந்த பெண் 18 வயது நிறைவடையாத பெண் என்பதால் இயக்குனர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாசிக் அலி இளம்பெண்ணின் தாயை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இந்த வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஜாசிக் அலி, அந்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications