கடவுளின் தேசத்தில் கஞ்சா வாசனை..வசமாய் சிக்கிய இயக்குனர்கள்.. இவங்களா? மலைத்துப் போன மலையாள சினிமா!
திருவனந்தபுரம்: என்னதான் ஆச்சு கடவுளின் தேசத்திற்கு என்பது போல மலையாள திரையுலகம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஹேமா கமிட்டி அறிக்கை, அதைத் தொடர்ந்து போதை பொருள் பயன்பாடு என அடுத்தடுத்து இளம் நடிகர்களும் இயக்குனர்களும் சிக்கி வருகின்றனர. அந்த வகையில் தற்போது கொச்சியில் ஹைபிரிட் கஞ்சா பயன்படுத்தியதாக பிரபல மலையாள இயக்குனர்களான காலிப் ரஹ்மான், அஷ்ரப் ஹம்ஸா மற்றும் அவரது நண்பர் ஷாலிப் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2024 - 2025 மலையாள திரை உலகுக்கு சிறப்பான ஆண்டுகள் என சொல்லலாம். அந்த அளவுக்கு அங்கு வெளியான படங்கள் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களை கவர்ந்தது. மொழிகள் தாண்டி ஆடு ஜீவிதம், மஞ்சும்மெல் பாய்ஸ் உள்ளிட்ட படங்கள் திரையுலகை கவனிக்க வைத்தது.
பல புதிய இளம் இயக்குனர்களும் நடிகர்களும் தங்கள் துறையில் முத்திரை பதித்தனர். அதே நேரத்தில் 2024 - 2025 மலையாள திரை உலகம் கடும் சர்ச்சையிலும் சிக்கியது. கேரளா திரையுலகில் பெண் நடிகைகள் துணை நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக கூறி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் வெளியான தகவல்களை அதற்கு பிறகு தொடுக்கப்பட்ட பாலியல் புகார்களும் மலையாள திரை உலகை புரட்டி எடுத்தது. அதற்குப் பிறகு போதைப்பொருள் விவகாரம் மலையாள திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த வருடமே சூட்டிங் ஸ்பாட்டுகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில் போலீசார் சோதனை நடத்தி போதைப்பொருட்களை கைப்பற்றினர். அப்போது ஷேன் நிகாம், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் படங்களில் நடிக்க அம்மா தடை விதித்த நிலையில் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
அதற்குப் பிறகு பிரபல நடிகரான விநாயகன் தொடர்ந்து பொது இடங்களில் போதையில் தகராறு செய்து வந்தார். அவர் போதை பொருள் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்த பிரபல நடிகரான ஷான் டாம் சாக்கோ பிரபல விடுதி ஒன்றில் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையின் போது சிக்கி ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்றார்.
அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போதைப்பொருளுடன் நடிகை ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவமும் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நடிகை கேட்டுக் கொண்டதால் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் நடிகர் ஷான் டாம் சாக்கோ மன்னிப்பு கேட்டதால் அந்த விவகாரம் அதோடு முடிவுக்கு வந்தது.
சரி இனி பிரச்சினை இல்லை என பார்த்தால் தற்போது கஞ்சா சோதனையில் சிக்கி இருக்கிறார்கள் மலையாள திரை உலகைச் சேர்ந்த பிரபல இயக்குனர்கள். கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப் பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக புகார் கிளம்பியது. இதை அடுத்து. கேரளா மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த பகுதியில் திடீரென சோதனை நடத்தினர். அதில் மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களான அஷ்ரப் ஹம்சா, கலித் ரகுமான், அவரது நண்பர் ஷாலிக் முகமது ஆகியோர் ஹைபிரிட் கஞ்சா பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அஷ்ரப் ஹம்சாவின் தமாசா படமும் தலித் ரகுமானின் ஆலப்புழா ஜிம்கானா படமும் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே இளம் இயக்குனர்களாக மக்களை கவர்ந்த அவர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மலையாள திரையுலகம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications