நாய் மீது மோதாமல் இருக்க.. பைக்கை திருப்பிய டைரக்டர் விவேக் ஆர்யன்.. தடுமாறி விழுந்து.. பரிதாப பலி
கேரள இளம் டைரக்டர் விவேக் ஆர்யன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
திருவனந்தபுரம்: நாய் மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பினார் டைரக்டர் விவேக்.. ஆனால், மனைவியுடன் சேர்ந்து கீழே விழுந்துவிட்டார்.. தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருந்த விவேக் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரளாவின் பிரபல டைரக்டர் ஜீத்து ஜோசப்.. இவர்தான் திரிஷ்யம், மெமரீஸ் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இவரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் விவேக் ஆர்யன்.. இவருக்கு வயது 30 ஆகிறது..

கல்யாணமாகி அம்ருதா என்ற மனைவி உள்ளார். சென்ற வருடம் "ஓர்மையில் ஒரு சிஷ்ரம்" என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனரானார். அதேபோல, தமிழில் கூட சில குறும்படங்களை இவர் டைரக்ட் செய்துள்ளார்.
இந்நிலையில் போன டிசம்பர் மாதம் 22ம் தேதி, மனைவி அமிர்தாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ரோட்டின் குறுக்கே ஒரு நாய் வந்தது.. அதனால் அந்த நாய் மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பினார்.. இதில் நிலைதடுமாறி தம்பதி 2 பேருமே கீழே குப்புற விழுந்துவிட்டனர்.. இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உயிருக்கு போராடிய இவர்கள் மீட்கப்பட்டு, எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விவேக் ஆர்யனுக்கு தலையில் பலமான அடிபட்டது.. அதனால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வளவு நாள் தீவிர சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி விவேக் ஆர்யன் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு இன்று நடந்தது.. இளம் இயக்குனரின் இந்த மரணம், கேரள சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications