பைக் மீது மோதி விட்டு நிற்காமல் ஜூட்! மஞ்சுமெல் பாய்ஸ் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமம் ரத்து
திருவனந்தபுரம்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் சுபாஷ் எனும் கேரக்டரில் நடித்த ஸ்ரீநாத் பாசி என்பவர் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதை அடுத்து புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் அவருடைய ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ரீநாத் பாசி. இவர் அண்மையில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் அந்த படத்தில் குணா குகையில் உள்ள 200 அடி ஆழ பள்ளத்தில் விழுந்துவிடுவார்.

இவரை அவருடைய நண்பர்கள் எப்படி மீட்கிறார்கள் என்பதுதான் கதை. இந்த படத்தில் அவருக்கு ரத்த காயங்களை தத்ரூபமாக காட்டுவதற்காக ஓரியோ பிஸ்கெட்டுகளை கொண்டு மேக்கப் போடப்பட்டதாம். அந்த பிஸ்கெட் மீது எறும்பு மொய்க்காமல் இருக்க அவர் படாதபாடுபட்டாராம்.
இவர் அண்மையில் கேரளாவில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது. தகவலறிந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவர் மற்றொரு வழக்கிலும் சிக்கினார். அதாவது எர்ணாகுளத்தில் காரில் சென்ற போது அவரது கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் அந்த பைக்கில் பயணம் செய்த முகமது பஹீம் என்பவர் படுகாயமடைந்தார். மேலும் நடிகர் ஸ்ரீநாத் பாசி, அந்த நபருக்கு என்ன நடந்தது என்பது குறித்து கூட கேட்காமல் அவர் பாட்டுக்கு காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் எர்ணாகுளம் மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த வழக்கில் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அலுவலர் தற்காலிகமாக ரத்து செய்தார். அவரது ஓட்டுநர் உரிமம் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் ஒரு மாதத்திற்கு வாகனங்களை இயக்கக் கூடாது.
போதை வழக்கில் நடிகர் ஸ்ரீநாத்திடம் விசாரணை நடத்தியதில் அவருக்கும் போதை பார்ட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் போதை பொருளை பயன்படுத்தியது கூட கிடையாது என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications