ஐயப்பனை காண குவியும் பக்தர்கள்..சன்னிதானமே திணறுது! திருப்பதி ரூட்டை கையிலெடுத்த தேவஸ்தான அதிகாரிகள்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து மகரவிளக்கு பூஜை நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து திருப்பதி போல பக்தர்களை குழுவாக நிறுத்தி வைத்து தரிசனத்திற்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
கேரளாவின் சபரிமலையில் குடி கொண்டிருக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கை தொட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி சபரிமலை மண்டல பூஜை தொடங்கி நிறைவு பெற்றது.

இந்த நிலையில் தற்போது மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதற்காக டிசம்பர் 30-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை பக்தர்கள் கூட்டம்:
தினமும் அதிகாலையில் இருந்து பகல் ஒரு மணி வரையிலும், மூன்று மணி முதல் 11 மணி வரையிலும் என 18 மணி நேரம் நடை திறக்கப்படுகிறது. தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். ஏற்கனவே ஆன்லைன் புக்கிங் மூலம் பதிவு செய்தவர்கள் 70 ஆயிரம் பேரும், எரிமேலி பம்பை ஆகிய இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்கள் 20,000 பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தடுத்து நிறுத்தப்படும் பக்தர்கள்:
இந்த நிலையில் இந்த ஆண்டு சீசன் நிறைவடைய இருக்கும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது, இதன் காரணமாக பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்படும் பக்தர்கள் அதற்கு பிறகு கன்னிமூல கணபதி கோவில் அருகே சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மலைப்பாதையில் செங்குத்தாக ஏறும் பக்தர்கள் அப்பாச்சி மேடு பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

மணிக்கணக்கில் காத்திருப்பு:
நீலிமலை, அப்பாச்சி மேடு டாப், மரப்பாலம், சரங்குத்தி ஆகிய பகுதிகளில் குழு குழுவாக பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிக நெருக்கமாக மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடைப்பை திறந்த உடன் வேகமாக ஓடிச் செல்லும் பக்தர்களால் குழந்தைகள் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பம்பையில் இருந்து மலையேறும் பக்தர்கள் சுமார் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
பெருவழிப்பாதை பயணம்:
மேலும் மலைப்பாதையில் பயணிக்கும் போது அடைக்கப்படும் பக்தர்கள் கம்பிவேலிகளுக்குள் இருக்கும் நிலை இருக்கிறது. அங்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாதது பக்தர்களை சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கிடையே எரிமேலியிலிருந்து கன்னி சாமிகள் உடன் பேட்டை துள்ளி பெருவழிப்பாதையில் அழுதா நதி, அழுதா மழை, முக்குழி, கரிமலை, பெரியானை வட்டம், சிறுயானை வட்டம் ஆகிய பகுதிகளை கடந்து வரும் பக்தர்கள் பம்பையில் நீராடி சபரிமலை செல்கின்றனர்.
சிறப்பு டோக்கன் ரத்து:
சுமார் 60 கிலோ மீட்டர் பெருவழி பாதையில் வரும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய டிசம்பர் 18ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை சிறப்பு டோக்கன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பக்தர்கள் கூட்டத்தால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு சாதாரண வரிசையிலேயே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பல கிலோமீட்டர் பயணம் செய்து வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
பக்தர்கள் கோரிக்கை:
குறிப்பாக 18 படி ஏறுவதற்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது சன்னிதானத்தில் இருந்து குழு குழுவாக பக்தர்கள் 18 படி ஏற அனுமதிக்கப்படும் நிலையில் ஆழிக் குண்டம் அருகில் இருந்து 18 படி ஏறுவதற்கே சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் மீண்டும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 18 படி ஏறிய பின் சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலையில், 18 படி ஏறிய உடனே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications