திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நள்ளிரவில் "பார்ட்டி".. ஹோட்டல் ஓனர் உட்பட 6 பேரை வளைத்த போலீஸ்.. மாடல் அழகிகள் மரணத்தில் திருப்பம்

கேரள முன்னாள் அழகியின் விபத்து தொடர்பான விசாரணை நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாடல்கள் 2 பேர் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

2019ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர்... இதே அழகி போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர் அஞ்சனா ஷாஜன்.. இவர்கள் 2 பேருமே நெருகிய தோழிகள்..
இந்நிலையில், அன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் அவர்களின் நண்பர்கள் முஹம்மது ஆசிக் ஆகியோர் நவம்பர் மாதம் 1-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் பாலாரிவட்டத்திலிருந்து இடப்பள்ளி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.

கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்

 மரத்தில் மோதியது

மரத்தில் மோதியது

அப்போது இவர்களின் கார் முன்னாடி ஒரு பைக் சென்று கொண்டிருந்தது. அந்த பைக் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக, காரை திருப்பவும், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ரோட்டில் ஓடியது.. இறுதியில் சாலையோரம் இருந்த மரத்தில் பலமாக மோதியது... இதில் கார் அடியோடு நொறுங்கி அதில் இருந்த அன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் இருவருமே உடல் நசுங்கி அங்கேயே உயிரிழந்தனர். டிரைவர் உட்பட 2 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு, எர்ணாகுளம் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டனர்.

 விசாரணை

விசாரணை

ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த முஹம்மது ஆஷிக் கடந்த 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்துல் ரஹ்மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து, அவர் ஓரளவு உடல்நலம் தேறினார்.. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணையை நடத்தினர்.. அப்போதுதான் அப்துல் ரஹ்மான் போதையில் கார் ஓட்டியது தெரியவந்தது... அதுமட்டுமல்ல, கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் 31-ம் தேதி இரவு டிஜே பார்ட்டியில் இவர்கள் அனைவருமே கலந்துகொண்டது தெரியவந்தது..

சிசிடிவி

சிசிடிவி

இதையடுத்து அந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.. அதில் 4 பேருமே ஹோட்டலுக்கு செல்லும் காட்சிகள் பதிவாகி இருநத்ன.. ஆனால் ஹோட்டலில் டிஜே பார்ட்டி நடந்த ஹாலில் பதிவான காட்சிகள் மட்டும் அதில் அழிக்கப்பட்டிருந்தது. இதுதான் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் மது விருந்துகள் இந்த ஹோட்டலில் நடந்துள்ளதால், கடந்த மாதம் 23-ம் தேதியே ஹோட்டலுக்கு சீல் வைத்து விட்டார்களாம்.. ஆனால் 31-ம் தேதி மறுபடியும் அதே ஹோட்டலில் மதுவிருந்து நடந்துள்ளது..

 ஹோட்டல்

ஹோட்டல்

எனவே, இது வெளியில் தெரியாமல் இருப்பதற்காகவே, அந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.. மேலும் அழிக்கப்பட்ட அந்த சிசிடிவி காட்சிகளை மீட்கும் முயற்சியிலும் இறங்கினர்.. இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கைதாகியுள்ளவர் பெயர் ராய் வயலாட்.. இவர்தான் அந்த ஹோட்டல் ஓனர் ஆவார்.. கொச்சியை சேர்ந்தவர்.. நம்பர்.18 என்ற பெரில் அந்த ஹோட்டலை நடத்தி வருகிறார்.

 விசாரணை

விசாரணை

சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காக அவருடன் சேர்த்து 5 ஓட்டல் ஊழியர்களையும் பாலரிவட்டம் போலீசார் கைது செய்துள்ளனர்.. முதல்கட்டமாக இவரிடம் தொடர்ந்து 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.. அப்போதுதான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்... இனி அடுத்தடுத்த விசாரணைகள் அவரிடம் நடத்தப்படும் என்றும் அப்போது மேலும் பல திடுக் தகவல்கள் வெளியாகலாம் என்றும் நம்பப்படுகிறது.

English summary
Miss Kerala died in Car Accident and Police arrest Kochi hotel owner five staff
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X