ரூபஸ்ரீ உடம்பெல்லாம் காயங்கள்.. தலைமுடியை அறுத்து.. சித்திரவதை செய்து.. பீச்சில் கொடூரம்!
திருவனந்தபுரம்: டீச்சர் ரூபஸ்ரீ-யின் உடம்பெல்லாம் காயங்கள்.. தலைமுடியை அறுத்து.. பீச்சில் கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளனர்.. 3 நாட்கள் கழித்து, அழுகிய நிலையில் ரூபஸ்ரீயின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிரமான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் - ரூபஸ்ரீ. சந்திரசேகரன் ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார். ரூபஸ்ரீ ஒரு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.. வயது 44 ஆகிறது.. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ரூபஸ்ரீ வழக்கமாக ஸ்கூலுக்கு டூவீலரில்தான் செல்வார்.. அப்படித்தான், 16-ந் தேதியும் ஸ்கூலில் இருந்து நேராக, பிள்ளைகள் படிக்கும் ஸ்கூலுக்கு சென்றார்.. அதற்கு பிறகு சொந்தக்காரர் வீட்டு கல்யாணத்திற்கும் சென்றார்.. அதற்கு பிறகுதான் வீடு திரும்பவே இல்லை.

பீச்சில் சடலம்
இதனால் கணவரும், உறவினர்களும் ரூபஸ்ரீயை எங்கெங்கோ சென்று தேடினர்.. ஆனாலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.. இந்நிலையில்தான், மஞ்சேஸ்வரம் பீச்சில் ரூபஸ்ரீ பிணமாக கிடந்தார். சடலம் பக்கத்திலேயே ரூபஸ்ரீயின் டூவீலரும் விழுந்து கிடந்தது.

தலைமுடி
அவரது தலைமுடி அறுக்கப்பட்டு இருந்தது. உடம்பெல்லாம் பல காயங்கள் இருந்தன.. ரூபஸ்ரீயை கடத்தி, அளவுக்கு அதிகமாக சித்ரவதை செய்து யாரோ கொன்றிருக்கிறார்கள் என்று மட்டும் தெரிந்தது. பீச் ஓரத்தில் விழுந்த கிடந்த இந்த சடலத்தை பார்த்த மீனவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

பலாத்காரம்
விரைந்து வந்த போலீசார் ரூபஸ்ரீ சடலத்தை மீட்டனர்.உடம்பெல்லாம் அழுகி கிடந்தது... எதற்காக தலைமுடியை அறுத்தார்கள் என்று தெரியவில்லை.. பலாத்காரம் செய்து கொன்றார்களா என்றும் தெரியவில்லை. எப்போதும் ரூபஸ்ரீயிடம் 2 செல்போன்கள் இருக்கும்...அதில் ஒரு செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இன்னொரு செல்போனை தொடர்பு கொண்டால் போன் ரிங் போகிறது.. ஆனால் யாரும் எடுக்கவில்லை.

விசாரணை
அதனால் அந்த செல்போன் டவர் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.. ரூபஸ்ரீயின் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் செல்போன் டவர் காட்டியது.. அந்த செல்போன் சிக்கினால்தான் ரூபஸ்ரீயை கொன்றவர்கள் யார், எதற்காக கொன்றார்கள் என்று தெரியவரும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications