போட்டோஷூட்.. மாடல் அழகியை லாட்ஜில் அடைத்து.. 3 நாளும் சீரழித்த கும்பல்.. வீடியோ எடுத்து.. பெண் கைது
மாடல் அழகியை பலாத்காரம் செய்த கும்பலை கைது செய்தனர் போலீசார்
திருவனந்தபுரம்: போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் என்று அழைத்து சென்று, மாடல் அழகியை லாட்ஜில் அடைத்து வைத்து 3 நாள் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளது ஒரு கும்பல்.. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் பெண்களுக்கான வன்முறை குற்றங்கள் இந்தியாவில் பெருகி கொண்டே வருகிறது.. இது தொடர்பான சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்டும், இத்தகைய குற்றங்கள் இன்றுவரை குறையாமல் உள்ளது.
இதில் கேரள மாநிலமும் அடக்கம்.. நேற்றுமுன்தினம்கூட, ஒரு கொடுமை அங்கு நடந்தது.. திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே பூவார் என்ற சர்வதேச சுற்றுலா தலம் உள்ளது.

இளம்பெண்கள்
இங்குள்ள காரைக்காடு தீவில் ஒரு லாட்ஜில் மதுவிருந்து நடப்பதாக திருவனந்தபுரம் கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது... எனவே, 20 பேர் அடங்கிய அதிகாரிகள் குழு மாறுவேடத்தில் சுற்றுலா பயணிகள் போல அந்த சொகுசு விடுதிக்குள் சென்று ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இசை நிகழ்ச்சி என்ற பெயரில் போதை பொருள் சப்ளை செய்யப்படுவதும், அதில் இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டதும் தெரிய வந்தது.

போதை விருந்து
இதையடுத்து கலால்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்... போதை விருந்தில் கலந்து கொண்ட திருவனந்தபுரம் மாடல் அழகி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்... இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்கும் முன்னரே இன்னொரு மாடல் அழகியின் செய்தி வெடித்து கிளம்பி உள்ளது.. 3 நாட்கள் லாட்ஜில் வைத்து கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார் இந்த மாடல் அழகி.

மாடல் அழகி
விளம்பரம் ஒன்றிற்கு முன்னதாக ப்ரீ போட்டோஷுட் எடுக்க வேண்டும் என்று சொல்லி, மாடல் அழகி ஒருவரை ஆலப்புழாவை சேர்ந்த சலீம் என்பவர் அழைத்துள்ளார்... சலீமுக்கு 33 வயதாகிறது.. மாடல் அழகிக்கு 27 வயதாகிறது.. அவரது பேச்சை நம்பி, அந்த மாடல் அழகியும் கொச்சியின் இடத்திரா பகுதியில் உள்ள லாட்ஜுக்கு சென்றுள்ளார். கடந்த 1ம் தேதி மாடல் அழகியை அழைத்து கொண்டு லாட்ஜுக்கு சென்றார்.

3 நாட்கள்
அங்கு ஜுஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததால் மயங்கி விழுந்த மாடல் அழகியை 3 நாட்கள் மயக்கத்திலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோவும் எடுத்துள்ளனர். 3 நாள் கழித்து, மாடல் அழகியை வெளியே அனுப்பியுள்ளனர்... உடல்நலம் மற்றும் மனரீதியான அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட அந்த பெண், கொச்சி இன்போ பார்க் போலீசில் அளித்த புகாரின் பேரில் சலீமை கைது செய்துள்ளனர்... மேலும், ஷமீர், அஜ்மலையும் கைது செய்தனர்.. ஆனால், அந்த லாட்ஜ் ஓனர் மட்டும் தலைமறைவாகி விட்டார்.. அவர் ஒரு பெண்.. பெயர் கிறிஸ்டினா..

லாட்ஜ் ஓனர்
அவரை வலைவீசி தேடி வந்த நிலையில், தற்போது அவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகிவிட்டதாம்.. ஆனால் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.. இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் இளம்பெண்களுக்கு மாடல்துறையிலான நாட்டம் அதிகரித்து வருகிறது.. அதேசமயம், இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் விஷமிகளும் இருக்கதான் செய்கிறார்கள்.. அறிமுகம் இல்லாதவர்களுடன் பாதுகாப்புடன் செல்ல வேண்டியது அவசியமாகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications