மோகன்லால் வாயே திறக்கல.. இப்ப கூண்டோடு ராஜினாமா.. நெளியும்"அம்மா".. அவசர மீட்டிங்கில் திடீர் முடிவு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர்கள் மீது அடுத்தடுத்து குவியும் பாலியல் பலாத்கார புகார்கள் மலையாள நடிகர் சங்கத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மலையாள நடிகர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் இன்று கொச்சியில் நடந்தது. இதில், தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அத்துடன், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கேரள நடிகைகள், மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரித்து, அறிக்கை வழங்க வேண்டும் என்று நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் நியமிக்கப்பட்டிருந்தது.

Mohan lal Hema Committee report Kerala

ஹேமா கமிட்டி: இந்தக் கமிஷனானது, கடந்த வாரம் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அதில், "15 பேர் பிடியில் மலையாள சினிமா சிக்கியிருப்பதாகவும், பெண் தொழிலாளா்கள் மீது பாலியல் சீண்டல் நடப்பதாகவும், நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளதாகவும், பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகளுக்கு மட்டுமே சினிமா சான்ஸ் வழங்கப்படுவதாகவும் பல்வேறு விஷயங்கள் அதில் அம்பலமாகியிருக்கின்றன.

இந்த அறிக்கையானது கேரளா சினிமாவையே தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி வருகிறது.. பல பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருவது அதற்கு மேல் அதிர்ச்சியை தந்து வருகிறது... இது தொடர்பாக டைரக்டர் ரஞ்சித், நடிகர் சித்திக் ஆகியோர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் சங்க பொறுப்புகளையும் ராஜினாமா செய்துள்ளனர்..

புகார்கள்: இதற்கு நடுவில் நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். நேற்றுகூட, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இப்படி நாளுக்கு நாள் குவியும் புகார்களால் மலையாள சினிமா உலகம் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறது.. இதனிடையே, அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகளால், மலையாள நடிகர் சங்கத்தில் திடீர் மோதலும் ஏற்பட்டது.. முன்னாள் தலைவர் சித்திக் கூறிய சில கருத்துக்களுக்கு எதிராக, துணைத் தலைவர்கள் ஜெயன் சேர்த்தலா, ஜெகதீஷ் ஆகியோர் பேசியது நடிகர் சங்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது..

வழக்கு பதிவு: ஒருவேளை இது முற்றும்சூழலில், பாலியல் புகார்கள் தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்யக்கூடும் என தெரிகிறது. அப்படி வழக்கு பதிவு செய்தால், மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு இன்னும் சிக்கல் ஏற்படும் நிலைமையும் உள்ளது..

நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் பலாத்கார புகார்கள் குவிவதால், மலையாள நடிகர்கள் சங்கம் கையை பிசைந்து வருகிறது. இதையடுத்து இன்று அவசர செயற்குழு கூட்டத்தை கூட்ட நடிகர்கள் சங்கம் தீர்மானித்தது.

மோகன்லால்: இதில் தலைவர் மோகன்லால், தற்காலிக பொதுச் செயலாளர் பாபுராஜ், துணைத் தலைவர்கள் ஜெயன் சேர்த்தலா, ஜெகதீஷ், நடிகைகள் அன்சிபா ஹசன், அனன்யா, ஜோமோள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வதாகவும், இன்றைய தினம், நடக்க போகும் இந்தக் கூட்டத்தில், திரையுலக நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே, இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.. இதில், சங்கத்தின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார்.. அத்துடன், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்ததை அடுத்து, அக்குழுவும் கலைக்கப்பட்டுள்ளது.

அதிரடி முடிவு: மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் எந்தவொரு கருத்துக்களையும் தற்போது வரை தெரிவிக்கவில்லை என்று ஏற்கனவே பிரித்விராஜ் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த அம்மா சங்கத்தில் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. இது கேரள திரையுலகில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

அறிக்கை விவரம்: நடிகர் சங்கத்தில் {AMMA} இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருக்கிறார்கள்.. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:

"சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்வதற்கு காரணம் சங்கத்து உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. இது கடந்த சில நாட்களுக்காக அனைத்து பத்திரிக்கை ஊடங்களில் பேசும் பொருளாக இருக்கிறது. இதனால் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தார்மீக அடிப்படையில் செயற்குழுவை கலைக்க தீர்மானம் செய்துள்ளோம். புது செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் மறு தேர்தல் வைத்து இன்னும் 2 மாதங்களில் உருவாக்கப்படும்.

புது செயற்குழு மற்றும் தலைமை பொறுப்பு விரைவில் இந்த சங்கத்தை மீண்டும் புதிய பலத்துடனும், உத்வேகத்துடனும் மீட்டெடுக்கும். எங்கள் மேல் உள்ள பிழையை சுட்டி காட்டியதற்கு அனைவருக்கும் நன்றி" என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+