எர்ணாகுளத்தில் விழுந்த ரூ.10 கோடி.. பம்பர் லாட்டரியில் முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யார்?
திருவனந்தபுரம்: கேரளாவில் மழைக்கால பம்பர் பரிசு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் முதல் பரிசான ரூ.10 கோடி எர்ணாகுளத்தில் லாட்டரி சீட்டு வாங்கிய நபருக்கு அடித்துள்ளது. 4 நாட்கள் ஆகிவிட்டதால், ரூ. 10 கோடி வென்ற அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று எதிர்பார்ப்பு கேரள மக்கள் இடையே எற்பட்டுள்ளது.
கேரளாவில் மழைக்கால பம்பர் பரிசு லாட்டரி டிக்கெட்டுகள் கடந்த மே 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்றது. 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்பனையாகின.

முதல் பரிசு ரூ.10 கோடி: மொத்தம் 4 சீரிஸ்களில் லாட்டரி அச்சிடப்பட்டு இருந்தது. MA, MB, MC,MD, ME என நான்கு சீரிஸ்களில் டிக்கெடுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். இரண்டாவது பரிசாக 5 பேருக்கு தலா 10 லட்சமும், 3-வது பரிசாக ஐந்து பேருக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கப்படும், 4-வது பரிசாக 5 பேருக்கு 3 லட்சமும் 6-வது பரிசாக 5 ஆயிரமும் அறிவிக்கப்பட்டது. இந்த சீட்டுக்கான குலுக்கல் கடந்த 31 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெற்றது.
எர்ணாகுளம் நபர் யார்?: இதில், MD 769524 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு அடித்தது. எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுபுழாவில் உள்ள தனலட்சுமி லாட்டரி ஏஜென்சியில் முதல் பரிசு வென்ற லாட்டரி விற்கப்பட்டது தெரியவந்தது. பரிசுத்தொகை விழுந்து 3 நாட்கள் ஆகியும் முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியவில்லை. இதனால், 10 கோடி வென்ற அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று எதிர்பார்ப்பு கேரள மக்கள் இடையே எற்பட்டுள்ளது.
ஒரு பக்கம் வயநாடு சோக சம்பவம் கேரள மக்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் லாட்டரியில் முதல் பரிசு அடித்த அதிர்ஷடசாலி யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. கேரள லாட்டரி துறையும் எர்ணாகுளத்தில் MD 769524 என்ற லாட்டரி சீட்டை வாங்கிய நபர் யார் என்று விசாரித்து வருகிறது. 31 ஆம் தேதி ரிசல்ட் வெளியான நிலையில், இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் அந்த நபர் லாட்டரி சீட்டை காண்பிக்க வேண்டும்.
லாட்டரி சீட்டு: இந்தியாவில் கேரளா, பஞ்சாப், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவில் மாநில அரசே லாட்டரி விற்பனையை நடத்துகிறது. கேரளாவில் லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. டீக்கடை இருக்கிறதோ இல்லையோ லாட்டரி கடை இல்லாத சிறிய டவுன்களை கூட பார்க்க முடியாது என்ற அளவுக்கு அங்கு லாட்டரி கடைகள் அதிகம் இருக்கின்றன. கேரளாவில், கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், ஓணம் பம்பர் என ஆறு வகையான பம்பர் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அதிகபட்சமாக ஓணம் பம்பர் டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைக்கும். பம்பர் பரிசு டிக்கெட்டுகள் போக தினமும் கேரளாவில் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறும். இதில் புதன்கிழமை விற்பனை செய்யப்படும் ஃபிப்டி ஃபிப்டி டிக்கெட்டிற்கு மட்டுமே ரூ.1 கோடி பரிசுத்தொகையாகும். இதர டிக்கெட்டுகளுக்கு ரூ.75 லட்சம் முதல் பரிசாக கிடைக்கும்.
தமிழ்நாட்டில் தடை: கொடுக்கின்ற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று ஒரு பழமொழி சொல்வதுண்டு.. அதேபோலத்தான்.. லாட்டரி சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனவர்கள் உண்டு. கடனுக்கு வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழுந்து பல கோடிக்கு அதிபதியான அதிர்ஷ்டசாலிகள் பற்றிய சுவாரசிய செய்திகளை அடிக்கடி கேள்வி பட்டு இருக்கிறோம். லாட்டரியை பொறுத்தவரை அதில் பரிசு அடித்த கோடிகளை அள்ளியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், லாட்டரியால் வீழ்ந்த பல குடும்பங்களை காண முடியும். இதனால் தான் தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications