ஆசையாக சென்ற சுற்றுலா.. ஆபத்தான மூணாறு பள்ளத்தில் விழுந்த கார் - தாய் மகன் உயிரிழந்த பரிதாபம்
திருவனந்தபுரம்: மூணாறு அருகே சுற்றுலா பயணிகள் சென்ற கார் 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் எட்டு வயது சிறுவன் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் போடிமெட்டு வழியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கேரள மாநிலம் மூணாறு நோக்கி காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வந்த கார் மூணாறு அருகே பெரிய கானல் பகுதியில் உள்ள கேப் ரோடு என்ற மலைப்பாதையில் பயணித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்தது.

தரிகெட்டு ஓடிய கார் சாலையை விட்டு விலகிச்சென்று அருகே இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பலத்த சேதம் அடைந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மூணாறில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் 8 வயது சிறுவன் நைசா மற்றும் அவரது தாய் நவ்ஷத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மூணாறு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாவுக்காக மகிழ்ச்சியோடு சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications