கொத்து கொத்தாய்.. 9,000 வாத்துகள் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ஆலப்புழா.. மீண்டும் பறவை காய்ச்சலா?
கேரளாவில் 9 ஆயிரம் வாத்துகள் உயிரிழந்துள்ளன
திருவனந்தபுரம்: ஏற்கனவே கொரோனா தொற்று கலக்கத்தில் கேரள மாநிலம் சிக்கி வரும் நிலையில், 9 ஆயிரம் வாத்துக்கள் திடீர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கிய மாநிலங்களில் கேரளா ஆகும்.. அங்கு கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை.
எனினும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4723 ஆக உள்ளது.. அதேபோல, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 5370 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை
இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 40,132 என்றும், இன்று ஒரே நாளில் டெஸ்ட் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,524 என்றும் கூறப்படுகிறது.. இப்போதைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 43,663 ஆக உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.. இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கி வருகிறது.

கேரளா
இந்நிலையில், நோரோ, ஜிகல்லா உள்பட சில வைரஸ் நோய்களும் கேரளாவில் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.. கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியது... இதற்கான தடுப்பு நடவடிக்கையில் அம்மாநில அரசு ஈடுபட்டுவரும்போதே, ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் பரவியது.

வாத்து பண்ணைகள்
இப்போது மறுபடியும் பறவை காய்ச்சல் வந்துள்ளதோ என்ற கலக்கம் சூழ்ந்துள்ளது.. காரணம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வாத்து பண்ணைகள் உள்ளன.. அந்த வகையில் ஆலப்புழா அருகே அம்பலப்புழாவில் ஜோசப் என்பவர் வாத்து பண்ணை வைத்துள்ளார்... இந்த பண்ணையில் கடந்த சில நாட்களாக வாத்துகள் திடீர் திடீரென செத்து விழுந்துள்ளன.. இந்த 3 நாட்களில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்தன.

அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியடைந்த ஜோசப், இதுகுறித்து திருவல்லாவில் உள்ள பறவைகள் நோய் சிகிச்சை மையத்திற்கு தகவல் தந்தார்.. உடனே டாக்டர்கள் சம்பந்தப்பட்ட வாத்து பண்ணைக்கு வந்து, இறந்த வாத்துகளின் ரத்த மாதிரியை சேகரித்து, திருவனந்தபுரத்தில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

டெஸ்ட்கள்
இதன் முடிவுகள் வந்தால்தான் வாத்துகள் இறப்புக்கு காரணம் தெரியும்? ஒருவேளை பறவை காய்ச்சல்தான் காரணமா என்றும் தெரியவரும்.. அதுமட்டுமல்ல, அந்த வாத்து பண்ணையில் உள்ள மற்ற வாத்துகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.. கடந்த வருடமும், இவரது இதே பண்ணையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள், பறவை காய்ச்சல் நோய் பாதித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications