Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

The Kerala Story National Award: ‘எங்கள் வரலாறு தெரியாமல் அவமதிப்பதா’.. பினராயி விஜயன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தி கேரளா ஸ்டோரி படம் வெளியான போதே கேரளா மாநிலத்தையும், சிறுபான்மை மக்கள் குறித்தும் தவறான தகவல்களை பரப்புவதாக புகார் எழுந்தது. அந்தப் படத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டமும் நடத்தின. இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இது அந்த மாநிலத்தை மேலும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்ததுடன், தங்களை அவமானப்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார்.

Pinarayi Vijayan The Kerala Story National Award

தேசிய விருது

ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்த படைப்புகளுக்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்படும். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தப் படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் சிறந்த இயக்குநர் விருதுக்கும் மற்றும் ஒளிப்பதிவாளர் பிரசந்தனு மொஹபத்ரா சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த சுமார் 32,000 பெண்கள் முஸ்லீம் மதத்துக்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைக்கப்பட்டு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக அந்தப் படத்தில் கூறப்பட்டிருந்தது.

தி கேரளா ஸ்டோரிக்கு எதிர்ப்பு

தி கேரளா ஸ்டோரி படம் வெளியாகியிருந்தபோதே அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்தப் படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதற்கு கேரளா அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

முதல்வர் கண்டனம்

இதுதொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தன் எக்ஸ் பக்கத்தில், "தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரள மாநிலத்தின் நன்மதிப்பு கெடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது. வகுப்புவாத பிரிவை விதைக்கும் எண்ணத்தில் அந்தப் படத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு படத்திற்கு தேசிய விருது வழங்கியுள்ளனர்.

இது சங்பரிவாரின் பிளவுப்படுத்தும் அரசியல் நிலைப்பாட்டையே காட்டுகிறது. சங்பரிவார் சித்தாந்தத்தில் ஆழமாக வேரூன்றி எடுக்கப்பட்ட படத்திற்கு தேசியளவிலான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை விருதுக்குழு வழங்கியுள்ளது. கேரளா வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் மாநிலமாக விளங்கி வருகிறது.

அவமதிப்பு

அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தை இதன் மூலம் அவமதிப்பு செய்திருக்கிறார்கள். கேரளா மக்கள் மட்டுமல்லாமல், ஜனநாயகம் மற்றும் நம் நாட்டின் அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். சங்கபரிவார் சினிமாவை ஆயுதமாக ஏந்தி அதன் மூலம் வகுப்புவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வகுப்புவாத அரசியலை முன்னிறுத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஒன்று திரண்டு போராட வேண்டும்." என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து வேகமாக பரவி வருகிறது. இதேபோல பல்வேறு கட்சிகளும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது வழங்கியதை கண்டித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+