திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் டிரெண்டா? கையில் "மாம்பழ" ஜூஸுடன் ஓடிய மாணவி.. ஹார்லிக்ஸில் விஷம் கலந்து! கேரளாவில் "அடாவடி"

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஹாரோன் என்ற இளைஞர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையான நிலையில், கேரளாவில் சமூக வலைத்தளங்களில் புதிய வீடியோ டிரெண்டு ஒன்று உருவாகி உள்ளது.

கேரளாவில் ஹாரோன் என்ற இளைஞரை கிரீஷ்மா என்ற பெண் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி அந்த இளைஞர் மரணம் அடைந்தார்.

கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ். 23 வயதே ஆன இவர் கல்லூரி படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் கிரீஷ்மா என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. கிரீஷ்மாதான் சமீபத்தில் ஷரோனை திருமணம் செய்து கொண்டு, அதன்பின் அவருக்கு விஷம் கலந்த கஷாயத்தை கொடுத்து கொலை செய்துள்ளார்.

ஆந்திராவில் கொடூரம்.. விஷம் வைத்து 45 குரங்குகள் கொலை.. வனத்துறை விசாரணை ஆந்திராவில் கொடூரம்.. விஷம் வைத்து 45 குரங்குகள் கொலை.. வனத்துறை விசாரணை

டிரெண்டு

டிரெண்டு

இந்த நிலையில்தான் தற்போது கேரளாவில் புதிய வீடியோ டிரெண்டு ஒன்று உருவாகி உள்ளது. இன்ஸ்ட்டா ரிலீஸ், யூ டியூப் ஷார்ட்ஸ் போன்றவற்றில் விஷம் கொடுப்பது தொடர்பான வீடியோக்கள் பல வைரலாகி வருகின்றன. கல்லூரி மாணவிகள் சிலர் சக மாணவர்களுக்கு ஜூஸ் கொடுக்க முயன்று அதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இப்படி ஜூஸ் கொடுக்க வரும் மாணவிகளிடம் மாணவர்கள்.. இல்லை எங்களுக்கு ஜூஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டு கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து செல்கிறார்கள்.

 கொலை

கொலை

மாணவிகள் பலர் இப்படி கையில் ஜூஸ் வைத்துக்கொண்டு அதை மாணவர்களிடம் கொடுத்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். கேரளாவில் தற்போது இந்த விவகாரம் புதிய டிரெண்டாக மாறி உள்ளது. இந்த கொலை மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவம். இருந்தாலும் அதை வைத்து மாணவிகள் பலர் ரீல்ஸ் செய்வது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இது போன்ற விவகாரங்களை எல்லாம் வைத்து ரீல்ஸ் செய்ய கூடாது என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஷரோன்

ஷரோன்

இந்த நிலையில் கேரளாவில் இன்னொரு விஷ விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. அதன்படி திருவனந்தபுரம் அருகே இருக்கும் நெடுவன்விழா பகுதியை சேர்ந்தவர் சுதீர். இவர் கேரளா பேருந்து போக்குவரத்து துறையில் டிரைவராக இருக்கிறார். இந்த நிலையில் போலீசில் இவர், தன்னுடைய மனைவி தனக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதாக கூறியுள்ளார். ஹார்லிக்ஸில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

பாறசாலை

பாறசாலை

இதற்காக பாறசாலை காவல் நிலையத்தில் அவர் ஹார்லிக்ஸ் பாட்டிலுடன் சென்று புகார் அளித்துள்ளார். அதில்,. என் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து எனக்கு விஷம் வைத்து உள்ளார். 2018லேயே அவர் எனக்கு உணவில் விஷம் வைத்தார். அப்போது நான் தப்பித்துவிட்டேன். எனக்கு உணவில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து இவர்கள் கொலை செய்ய பார்க்கிறார்கள். காதலனுடன் சேர்ந்து எனக்கு எதிராக இவள் சதித்திட்டம் தீட்டுகிறாள். எனக்கு பயமாக இருக்கிறது.

போலீஸ் புகார்

போலீஸ் புகார்

நான் 2018லேயே இது பற்றி போலீசில் புகார் கொடுத்தேன். அப்போதே இவர்கள் புகாரை எடுக்கவில்லை. இப்போது மீண்டும் என்னை கொலை செய்ய முயன்று உள்ளார் என் மனைவி. ஆனால் இப்போதும் என் புகாரை கேட்காமல் போலீசார் புறந்தள்ளி வருகின்றனர் என்று சுதீர் கூறியுள்ளார். இவரின் பேட்டி கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கேரளாவில் ஷரோன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார்மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மெத்தனம்

மெத்தனம்

அந்த பெண் மீது கொலை வழக்கு பதியப்பட்ட போதும் தொடக்கத்தில் அந்த பெண்ணை அழைத்து விசாரிக்கவில்லை. காவல் நிலையத்திற்கு பெண்ணை அழைத்து விசாரிக்காமல் இருந்துள்ளனர். பெண் என்பதால், அவர் கொலை செய்தும் கூட போலீசார் சலுகை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது,. இதை அம்மாநில அமைச்சர் அந்தோணிராஜ் கண்டித்து உள்ளார். இப்படி மெத்தனம் காட்டுவது தவறு. அந்த பெண் தலைமறைவாகி இருந்தால் என்ன செய்வீர்கள்? காவல்துறை மீது இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

English summary
New poison trend in Kerala: A driver in KSRTC accuses his wife for giving him poison in horlics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X