மேலும் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு.. அலறும் கேரளா! தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே இந்த வைரஸ் பாதிப்பால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிலர் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் திடீரென உயிரிழந்த நிலையில், அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், உயிரிழந்தவர்கள் நிபா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல கடந்த ஜூலை மாதத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சுறுத்தல் மேலெழுந்தது. மலப்புரம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை கேரளாவில் உள்ள ஆய்வகங்கள், புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகம் ஆகியவை உறுதி செய்திருந்தன.
அதேபோல கடந்த 16ம் தேதி மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், திடீரென உயிரிழந்தார். அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டதில், அவர் நிபா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த தொடர் உயிரிழப்புகள் கேரளாவில் நிபா வைரஸ் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளன.
எனவே, நிபா வைரஸ் பாதித்த திருவல்லி கிராம பஞ்சாயத்து மற்றும் மம்பத் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனுடன், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொழில் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அங்கு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பறவை அல்லது விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும், காய்கறிகளை நன்கு சுத்தப்படுத்தியபின் சமைக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறுபுறம் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு வரும் நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் சோதனையில் மேலும் இருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications