மின்னல் வேகத்தில் வந்தே பாரத் ரயில்.. நூலிழையில் உயிர்தப்பிய முதியவர்.. இணையத்தில் பரவும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டு இருந்த போது தண்டவாளத்தை அஜாக்கிரதையாக முதியவர் ஒருவர் கடந்து ரயில்வே பிளாட்பார்மில் ஏற முயற்சித்தார். மின்னல் வேகத்தில் வந்து கொண்டு இருந்த வந்தே பாரத் ரயில் அதிர்ஷ்டவசமாக அவர் மீது மோதாமல் சென்ற காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிவேகத்தில் இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்க்ளில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் என மொத்தம் 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 old man narrowly escape being hit by a Vande Bharat train while trying to cross the tracks in Kerala

வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் படி இயக்கப்பட்டு வருகிறது. சரி.. இங்கே விஷயத்திற்கு வருவோம்.. கேரள மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் தண்டாவளத்தை கடந்து ரயில்வே பிளாட்பார்மில் முதியவர் ஒருவர் ஏற முயற்சிக்கும் போது வந்தே பாரத் ரயில் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அதிர்ஷ்டவசமாக ரயிலில் சிக்காமல் காயம் இன்றி உயிர் தப்பினார்.

வேகமாக வந்த ரயில்: இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் வருமாறு: - கேரளாவில் உள்ள திரூர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 5 மணியளவில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தது. இதைக் கவனிக்காமல் முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கிறார். அப்போது அங்கு மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலை பார்த்த பயணிகள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

முதியவரை நோக்கி உடனே கூச்சலிட்டனர். தண்டவாளத்தின் குறுக்கே முதியவர் வந்து கொண்டு இருந்ததை பார்த்ததும் ரயிலின் லோகோ பைலட் ஹாரன் எழுப்பினார். ரயிலும் வேகமாக வந்து கொண்டு இருந்தது. இதனால், ரயிலையும் நிறுத்த முடியாத சூழல் இருந்ததால் ஹாரன் எழுப்பிக்கொண்டே ரயில் வந்து கொண்டு இருந்தது. இதனால் பதறிப்போன முதியவரும் வேகவேகமாக ரயில் பிளாட்பார்மில் ஏறினார்.

வழக்குப்பதிவு செய்யப்படும்: அதிர்ஷ்டவசமாக முதியர் ரயில் வருவதற்குள் பிளாட்பார்மில் ஏறிவிட்டார். அதன்பிறகு முதியவரை பலரும் ஏன் இப்படி பொறுப்பற்ற முறையில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கிறீர்கள் என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தை ரயிலின் பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் செல்போனில் எடுத்துள்ளார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரயிலில் தண்டவாளத்தை பொறுப்பற்ற முறையில் கடக்க முயற்சித்த முதியவர் குறித்த தகவல்களை ரயில்வே போலீசார் சேர்கத்து வருகின்றனர். ரயில்வே சட்டப்படி தண்டவாளத்தை கடப்பது அபராதத்திற்கு உரிய குற்றம் என்பதால் இது தொடர்பாக ரயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+