மருத்துவர் வந்தனா கொலையான அதே நாளில்..கேரளாவில் மற்றொரு இடத்தில் நடந்த ஷாக்..பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் இளம் மருத்துவர் வந்தனா, சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட விசாரணைக் கைதி சந்தீப் என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் அதே நாளில் மருத்துவர்கள் மீது மற்றொரு இடத்தில் தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.
Recommended Video
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் கடந்த சில நாட்களாக நடைபெறும் சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து இருக்கிறது. சமீபத்தில் தான் கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குக்குளானது. இதில் 22 பேர் பலியானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பத்தின் ரணங்களே ஆறாத நிலையில், கேரளாவில் அடுத்த ஒரு கொடூர கொலை நடைபெற்றது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வந்தனா தாஸ் (வயது 25) சிகிச்சைக்கு வந்த போதை நபரால் அதிகாலையில் குத்திக் கொல்லப்பட்டார்.
நெடும்பனாவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் சந்தீப் (வயது 41) குடிபோதையில் சண்டை போட்டதில் காயம் அடைந்து இருக்கிறார். இந்த தகராறு தொடர்பாக சந்தீப்பை கைது செய்த போலீசார், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விசாரணை கைதி சந்திப்பீற்கு மருத்துவர் வந்தனா சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
அப்போது கொடூர மனம் படைத்த சந்தீப் திடீரென அங்கு கிடந்த கத்திரிக்கோலை எடுத்து வந்தனாவை பலமுறை குத்தி கொலை செய்து இருக்கிறார். அதிகாலையில் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர், விசாரணை கைதியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம், கேரளாவை உலுக்கியது. கேரளா மட்டும் இன்றி நாடு முழுவதையும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
25 வயதே ஆன இளம் மருத்துவர் கொலை செய்யபட்டது. கேரளா முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. மாநிலம் முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தினரும், கேரள அரசு மருத்துவர்கள் சங்கத்தினரும் உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அதே நாளில் கேரளாவில் நெடும்கண்டம் பகுதியில் இரவு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களையும் நர்சுகளையும் போதை நபர் ஒருவர் தாக்கியதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நெடும்கண்டம் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் கைகலப்பில் ஈடுபட்டு காயம் அடைந்து இருக்கிறார். இந்த மோதல் தொடர்பாக பிரவீனை கைது செய்த போலீசார், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த பிரவீன் மருத்துவர்கள் மற்றும் நர்சுகளை தாக்கியிருக்கிறார்.
இதனால் உடனடியாக அங்கிருந்து சென்ற மருத்துவ குழுவினர் போலீசாரை அழைத்து இருக்கிறார்கள். போலீசார் வந்து பிரவீனை கட்டி போட்ட பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் அடுத்தடுத்து நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications