அத்தப்பூ கோலம் + அறுசுவை விருந்து.. கேரளாவில் களைகட்டிய ஓணம்.. புத்தாடை அணிந்து கொண்டாட்டம்
திருவனந்தபுரம்: கேரளா உள்பட நாடு முழுவதும் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலமிட்டு புத்தாடைகள் உடுத்தி கேரளா மக்கள் ஓணத்தை கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகையையொட்டி முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கேரளா மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பாரம்பரிய பண்டிகைகள் உள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல் கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான் மலையாள ஆண்டின் முதல் மாதமாக கருதப்படுகிறது.

இந்த மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு ஓணம் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். கேரளாவை ஆண்ட மகாபலி மன்னனின் நினைவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதேபோல் அறுவடை திருநாளாகவும் இந்த ஓணம் பண்டிகை என்பது கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை கேரளாவில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இன்று நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாப்பட்டு வருகிறது.
கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் வசிக்கும் மலையாள மக்கள் ஓணத்தை கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகையையொட்டி மொத்த கேரளாவும் களைகட்டியுள்ளது. வீடுகளின் முன்பு வண்ண வண்ண அத்தப்பூக்களால் பெரிய பெரிய கோலமிட்டு புத்தாடைகள் அணிந்து ஓணம் பண்டிகையை கேரளா மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் கேரளாவில் சபரிமலை உள்பட முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. சபரி மலையில் திருவோண நட்சத்திரத்திற்கான சிறப்பு பூஜைகளும் தொடங்கி உள்ளன. ஓணம் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பலவகை காய்கறிகள் கொண்டு சமைக்கப்பட்ட அறுசுவை உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஓணம் பண்டிகையையொட்டி முதல்வர் ஸ்டாலின் கேரளா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், ‛‛கேரள மக்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ஓணம் திருநாள் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
அத்தப்பூக்கோலம், அறுசுவை சத்ய விருந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நாளாகத் திருவோணம் அமைந்துள்ளது. நல்லாட்சி புரிந்த மன்னனை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தினாலும், அவனை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணர்த்தும் கொண்டாட்டமாகவே ஓணத்தைக் காணவேண்டும்.
திராவிட உடன்பிறப்புகளான கேரள மக்களுக்கு ஓர் இடர் என்றால் உடனடியாக உதவிக்கரம் நீட்டத் தமிழ்நாடு என்றுமே சகோதர உணர்வோடு முன்னிற்கும். அந்த வகையில்தான், அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததோடு, மீட்பு, மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்தோம்.
பெருமழை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மலையாளிகளுக்கே உரிய போராட்டக் குணத்துடன் மீண்டு வரும் கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் என்று நம்புகிறேன். சமத்துவம், சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் எனது அன்பிற்கினிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications