திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீடியோகாலில் வந்து நின்ற கல்யாண பெண்.. தாலியை செல்போனுக்கு கட்டிய மாப்பிள்ளை.. விசித்திர திருமணம்

ஆன்லைன் மூலமாகவே திருமணம் நடந்து முடிந்துள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஆன்லைனிலேயே படிப்பு, ஆன்லைனிலேயே வேலை என்பது போய், இப்போது ஆன்லைனிலேயே தாலி கட்டி திருமணமும் நடந்துள்ளது..!

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் பொதுமக்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்...

மாஸ்க் அணிந்தபடி, ஒருவித பீதியுடன் தான் இன்னமும் நடமாட வேண்டிய சூழல் உள்ளது. கோயில்கள், விசேஷங்கள், திருவிழாக்கள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்றவைகளை எல்லாம் கண்குளிர பார்த்தே 2 வருடங்கள் ஆகிவிட்டது..

வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் சான்றிதழ் கட்டாயம்- இலங்கை அரசு அதிரடி வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் சான்றிதழ் கட்டாயம்- இலங்கை அரசு அதிரடி

தொற்று

தொற்று

இதில் திருமணங்களும் விதிவிலக்கல்ல.. தடபுடல் விருந்துகளுடன் நடைபெறும் திருமணங்கள்கூட கொரோனாவால் 5 பேர், 10 பேர் முன்னிலையில் நடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.. அந்த வகையில் இந்த 2 வருடங்களாக எத்தனையோ ஆடம்பரமாக நடக்க வேண்டிய திருமணங்கள் வேறு வழியில்லாமல் எளிமையாக முடிந்து வருகின்றன..

திருமணம்

திருமணம்

சில சமயங்களில் பெற்றோர், உறவினர்களால் நேரில் வந்து வாழ்த்த வழியில்லாத நேரங்களில் ஆன்லைன் மூலமாக மணமக்கள் திருமணம் செய்து கொள்வதும் நேரிடுகிறது. இவர்களுக்கு வீடியோகால் மூலமாகவே ஆசீர்வாதங்களும் கிடைக்கின்றன.. அந்தவகையில் இப்போது ஒரு திருமணம் நடந்துள்ளது.. நியூசிலாந்தில் உள்ள மாப்பிள்ளை வீடியோகால் மூலமாகவே, கேரளாவின் திருச்சூரில் உள்ள பெண்ணுக்கு தாலி கட்டி உள்ளார்.. மாப்பிள்ளை பெயர் நிர்மல்.. நியூசிலாந்தில் என்ஜினியராக வேலைபார்த்து வருகிறார்..

 தொற்று பாதிப்பு

தொற்று பாதிப்பு

இவ்வளவுநாள் தொற்று பாதிப்புகள் குறைவாக இருந்த நிலையில், இவருக்கு கீர்த்தனா என்ற பெண்ணுடன் கடந்த 2019-ல் திருமணம் முடிவானது.. 2020-ல் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று இருவீட்டினரும் முடிவு செய்தனர்.. ஆனால், திடீரென தொற்று அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.. போதாக்குறைக்கு ஒமிக்ரான் வைரஸும் மிரட்ட ஆரம்பித்துவிடவும், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.. அந்த வகையில் நிர்மலும் வெளிநாட்டில் சிக்கி கொண்டுள்ளார். அவரால் இந்த 2 வருடங்களாக இந்தியாவுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது..

ஆசிரியை

ஆசிரியை

இப்படியே தள்ளிப்போட்டு கொண்டு போனால் அது சரிவராது என்று நினைத்த குடும்பத்தினர், ஆன்லைனிலேயே திருமணம் செய்ய முடியுமா என்று யோசித்தனர்.. அதன்படியே திருமணமும் முடிவானது.. மணமகள் கீர்த்தனா ஆசிரியை... இந்த திருமணத்திற்காக ரிஜிஸ்தர் அலுவலகத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.. பிறகு இரு வீட்டாரும் தங்களது வழக்கறிஞர்களை சந்தித்து, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்வதற்கான வழிகள் குறித்து விசாரித்தனர்...

 அனுமதி

அனுமதி

அதற்கான அனுமதியும் கிடைத்தது.. ஆன்லைன் திருமணத்திற்கு மணமக்கள் தயாராகிவிட்டனர்.. ரிஜிஸ்தரார் முன்பு திருமணம் நடந்தது.. வீடியோ மூலமாகவே தாலி கட்டப்பட்டது.. உறவினர்கள் சாட்சி கையெழுத்திட்டனர்.. இனி கோவிட் கட்டுப்பாடுகள் முடிந்து, நிர்மல் ஊர் திரும்பினால்தான் மணவாழ்க்கை இனிதே ஆரம்பமாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது..!

English summary
online wedding amid covid bride in Kerela ties knot with groom in new zealand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X