உங்க தலைவர் உடல்நலம் எப்படியிருக்கிறது? ஸ்டாலின் பற்றி திமுக எம்.பி.யிடம் விசாரித்த பினராயி விஜயன்!
திருவனந்தபுரம்: சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க தமிழகம் வருமாறு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு திமுக எம்.பி. ராஜேஷ் குமார் நேரில் அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
அத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்தனுப்பிய அழைப்புக் கடிதத்தையும் ராஜேஷ் குமார் வழங்கினார்.
இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நலம் பற்றி அதிக அக்கறையோடு ராஜேஷ் குமார் எம்.பி.யிடம் கேட்டறிந்திருக்கிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

செஸ் ஒலிம்பியாட்
வரும் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழக அரசு சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

கேரள முதலமைச்சர்
அந்த வகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க தமிழகம் வருமாறு திமுக எம்.பி.ராஜேஷ்குமார் அழைப்பிதழ் கொடுத்துள்ளார். சட்டசபையில் அமர்ந்திருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ராஜேஷ்குமார் எம்.பி. வந்திருக்கும் தகவலை அதிகாரிகள் தெரியப்படுத்தினர். உடனடியாக எந்த தாமதமும் செய்யாமல் அவரை மேலே வரச் சொல்லுங்கள் என அழைத்து அமர வைத்துப் பேசினார் பினராயி.

ஸ்டாலின் உடல்நலம்
முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரது உடல் நலம் பற்றி அதிக அக்கறையோடு ஆழமாக விசாரித்திருக்கிறார் பினராயி விஜயன். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு வாய்ப்பிருந்தால் தாம் உறுதியாக வந்து பங்கேற்பேன் என்ற உறுதியையும் ராஜேஷ் குமார் எம்.பி.யிடம் வழங்கியிருக்கிறார்.

தேநீர் சாப்பிடுங்க
அழைப்பிதழ் கொடுத்த கையோடு கேரள சட்டசபையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ராஜேஷ் குமார் எம்.பி.யை, அமர்ந்து தேநீர் குடித்துவிட்டுச் செல்லுமாறு விருந்தோம்பல் செய்து கவனித்துள்ளார் பினராயி. மேலும், ஸ்டாலினை நான் கேட்டதாகச் சொல்ல வேண்டும் எனக் கூறி ராஜேஷ்குமாரை வழியனுப்பி வைத்துள்ளார் பினராயி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications