கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் பதவியேற்றார்.. 21 அமைச்சர்களும் பதவியேற்றனர்
திருவனந்தபுரம்: கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் இன்று மாலை பதவியேற்றார். அவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
Recommended Video
140 இடங்களை கொண்ட கேரளா சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் முன்னணி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் 350 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

உளமாற உறுதி ஏற்பதாக கூறி முதல்வர் பினராயி விஜயன் உட்பட 21 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். 12 அமைச்சர்கள் இதில் சிபிஎம் கட்சியில் இருந்து பதவி ஏற்றனர். சிபிஐ கட்சியில் இருந்து 4 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
பினராயி விஜயனின் புதிய அமைச்சரவையில் பி.ஏ.முஹம்மது ரியாஸ், வி.சிவான்குட்டி, வீணா ஜார்ஜ், கே.என்.பாலாகோபால், வி.என்.வாசவன், சாஜி செரியன், பி ராஜீவ், எம்.பி.ராஜேஷ், கே ராதாகிருஷ்ணன், பி நந்தகுமார், மற்றும் எம்.வி.கோவிந்தன் போன்ற இளம் சிபிஎம் தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
கேரளா அமைச்சரவையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கபடவில்லை. இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
கேரளா காங்கிரஸ் (மணி), ஜனதா தளம் (மதசார்பற்ற), தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒரு அமைச்சர்கள் பதவி ஏற்றனர். உளமாற உறுதி ஏற்பதாக கூறி முதல்வர் பினராயி விஜயன் உட்பட எல்லா அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். மனசாட்சி படி பதவி ஏற்பதாக கூறி இவர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.
பினராயி விஜயன் அமைச்சரவையில் திருச்சூர் முதல் பெண் மேயராக இருந்த பேராசிரியர் பிந்து, பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ், தடகள வீராங்கனை சின்சு ராணி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சின்சு ராணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முதல் பெண் அமைச்சர் சின்சு ராணி.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி












Click it and Unblock the Notifications