ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே! - 8 நாள் பயணமாக அமெரிக்கா, கியூபா பயணம் புறப்பட்ட பினராயி விஜயன்!
திருவனந்தபுரம்: கேரளா இடதுசாரி அரசின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழு 8 நாட்கள் பயணமாக அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது.
அமெரிக்கா, கியூபா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழு. இந்த குழுவில் கேரளா சபாநாயகர் ஷம்சீர், நிதி அமைச்சர் பால கோபாலன் உள்ளிட்ட 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூன் 14-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பினராயி விஜயன் தலைமையிலான குழு பங்கேற்கிறது. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஜூன் 10-ந் தேதி கேரளா சபா மாநாட்டை பினராயி விஜயன் தொடங்கி வைக்க உள்ளார். அமெரிக்காவில் கேரளா மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பினராயி விஜயன் பங்கேற்கிறார்.

அமெரிக்காவில் பினராயி விஜயனுடன் பொதுமக்கள் படம் எடுப்பதற்கு பெரும் தொகை கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேரளாவில் பெரும் சர்ச்சையாக்கி இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அமெரிக்கா பயணத்தின் ஒரு பகுதியாக ஐநா சபை அலுவலகத்துக்கும் செல்கிறார் பினராயி விஜயன். அதேபோல நியூயார்க்கில் பயங்கரவாதிகள் தகர்த்த இரட்டை கோபுர நினைவிடத்துக்கும் செல்கிறது பினராயி விஜயன் குழு.
அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு இடதுசாரிப் புரட்சியாளர்கள் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவாரா உருவாக்கிய கியூபா நாட்டுக்கு செல்கிறது பினராயி விஜயன் குழு. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்த குழுவினர் பங்கேற்கின்றனர். கியூபாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பினராயி விஜயன் தலைமையிலான 8 பேர் குழு பார்வையிட உள்ளது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் உடல்நலன் பாதிக்கப்பட்ட போது அமெரிக்காவில் 3 முறை சிகிச்சை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications