Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா படகு விபத்து.. வேதனை தெரிவித்த பிரதமர் மோடி.. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி!

Subscribe to Oneindia Tamil

மலப்புரம் : கேரளாவில் ஏற்பட்ட கோர படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் பலர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்ததில் தற்போது வரை 21 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீரில் மூழ்கியவர்களை தேடும் மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

pm modi expresses grief for kerala boat accident victims announces relief fund

மாலை 6.30 மணி அளவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 21 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 5 குழந்தைகள் அடங்குவர்.

Recommended Video

    Worst In History | Kerala Boat விபத்து நடந்தது எப்படி? அதிக உயிரிழப்பு ஏன்? | Oneindia Tamil

    இந்த படகில் அதிகம் பேர் பயணம் செய்தது படகு கவிழ்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்தவர்களை காக்க முடியவில்லை என படகில் இருந்து உயிர் தப்பிய இளைஞர் ஷஃபிக் தெரிவித்துள்ளார்.

    மீட்பு படையினருடன் உள்ளூர் மீனவர்களும் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரியாஸ்கான் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கேரளா படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் பலர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+