குருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை பூ துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார் பிரதமர் மோடி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: குருவாயூர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி எடைக்கு எடை தாமரைப் பூ துலாபாரம் கொடுத்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.

பிரதமர் மோடி நாட்டின் பிரதமராக கடந்த 30 ஆம் தேதி மீண்டும் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து இன்று அவர் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் அப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கொச்சி சென்றடைந்ததார். அங்கு அவருக்கு அம்மாநில பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

தாமரைப்பூ துலாபாரம்

தாமரைப்பூ துலாபாரம்

அப்போது கிருஷ்ணன் கோவிலில் உள்ள துலாபாரத்தில் அமர்ந்து எடைக்கு எடை தாமரைப் பூ கொடுத்து பிரதமர் மோடி வேண்டுதலை நிறைவேற்றினார். துலாபாரம் கொடுத்த தாமரை மலர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோலில் இருந்து பிரத்யேகமாக கொண்டுவரப்பட்டது.

நெய், தேன் வழங்கிய மோடி

நெய், தேன் வழங்கிய மோடி

இதைத்தொடர்ந்து கோவிலுக்கு தேவையான நெய் மற்றும் தேன் ஆகியவற்றையும் பிரதமர் மோடி வழங்கினார். கோவிலுக்கு சென்ற மோடிக்கு அங்கிருந்த புரோகிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

மாலத்தீவு பயணம்

மாலத்தீவு பயணம்

இதைத்தொடர்ந்து அங்குள்ள பாஜகவினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இதைத்தொடர்ந்து மாலத்தீவு செல்கிறார் பிரதமர் மோடி.

முதல் வெளிநாட்டு பயணம்

மோடி இரண்டாவது முறையாக, பிரதமராக பதவியேற்றபின், முதல் வெளிநாட்டு பயணமாக, மாலத்தீவு நாட்டுக்கு, இன்று செல்கிறார். மாலத்தீவுக்கு, செல்லும் பிரதமர் மோடி, அங்கு, இரு தரப்பு உறவு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து மாலத்தீவு அதிபர், இப்ராகிம் சாலிகுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரை

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரை

இதைத் தொடர்ந்து மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+