கேரள நடிகை ஷெரின் செலின் தற்கொலை.. சோக பதிவுகள், நட்புகள் முறிவு.. நடந்தது என்ன? யார் அந்த இளைஞர்
திருவனந்தபுரம்: கேரள நடிகையும் மாடலுமான திருநங்கை 26 வயது ஷெரின் செலின் மேத்யூ திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் போலீஸ் விசாரணையில் பல விஷயங்கள் தெரியவந்துளளன.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஷெரின் செலின். இவர் திருநங்கை, 26 வயதாகிறது. இவர் மாடலாகவும் நடிகையாகவும் இருந்தார். கொச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்தார்.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று யாருடனோ வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்வதாக தெரிவித்துள்ளார் ஷெரின்.

அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த வீடியோ காலில் இருந்த மற்றொரு நபர் திடுக்கிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள் ஷெரின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை
இவரது தற்கொலை குறித்து நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் ஷெரின் இளைஞரை காதலித்ததாகவும் கடைசியில் இவர் திருநங்கை என தெரியவந்ததால் அந்த இளைஞர் ஷெரினை விட்டு பிரிந்ததாக தெரிகிறது. இதனால் ஷெரின் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

சோக பதிவுகள்
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நீண்ட காலமாக ஷெரினுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்ததாக தெரிகிறது. மேலும் நண்பர்களுடனும் மோதல் போக்கு ஏற்பட்டதாம். இதனால் ஒரு கட்டத்தில் சமூகவலைதள பக்கங்களில் தொடர்ந்து சோகமான பதிவுகளையே ஷெரின் போட்டதாக தெரிகிறது.

மன அழுத்தம்
மன அழுத்தத்தால் நண்பர்களை கூட சந்திப்பதை ஷெரின் நிறுத்திவிட்டாராம். நெருங்கிய நண்பர்களின் வாக்குமூலத்தை வைத்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாள் அன்று நடிகை சஹானா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு திருநங்கை அனயா குமாரி அலெக்ஸ் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஓராண்டில் கொச்சியில் தற்கொலை செய்து கொள்ளும் திருநங்கைகளில் ஷெரின் 5ஆவது நபர்.












Click it and Unblock the Notifications