மலையாள திரையுலகை விடாத பாலியல் புகார்! நடிகை குறித்து அவதூறு.. ’லப்பர் பந்து' ஸ்வாசிகா மீது வழக்கு!
திருவனந்தபுரம்: மலையாளத் திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து முன்னணி நடிகர்களான எடவேல பாபு, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு, ஜெயசூர்யா உள்ளிட்டோர் மீது நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் புகார் அளித்த நடிகை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை கூறியதாக லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா, பீனா ஆண்டனி, அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் மீது புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையாள திரை உலகில் ஒரு 'பவர் குரூப்' ஒட்டுமொத்த திரையுலகை கட்டி ஆள்வதாகவும், நடிகைகள், பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக நீண்ட காலமாகவே புகார் இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோவும் எடுக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பிரபல நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் கைது செயப்பட்ட சிலர் இன்னும் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் புகாரினை தொடர்ந்து ஹேமா கமிட்டி அமைத்து அரசு உத்தரவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் அது வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு அந்த அறிக்கையை வெளியான பிறகு மலையாளத் திரையுலகம் புரட்டிப் போட்டது போல ஆகிவிட்டது.
பல நடிகைகளுக்கு, நடிகர்களும் ,இயக்குனர்களும் பாலியல் தொல்லை தந்தது வெளிச்சத்திற்கு வந்தது. நடிகைகள், பெண் கலைஞர்கள் தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியண்ணன் பிள்ளை, எடவேல பாபு, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட வாய்ப்பு தருவதாக தன்னிடம் அத்துமீறியதாக ஆலுவாவை சேர்ந்த நடிகை ஒருவர், எடவேல பாபு, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு, ஜெயசூர்யா, ஜாஃபர் இடுக்கி மற்றும் நடிகரும் இயக்குனருமான பாலச்சந்திர மேனன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் மீது புகார் அளித்தார். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆலுவாவைச் சேர்ந்த புகார் அளித்த நடிகை குறித்து அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவதூறாக பேசினார். பட வாய்ப்பு தருவதாக தன்னையும் நடிகர்களிடம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என அவர் பேசியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் புகார் அளித்த நடிகை குறித்து லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஸ்வாசிகா, பீனா ஆண்டனி, அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் யூட்யூப் சேனல் பேட்டி ஒன்றில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து தன்னைக் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நடிகை போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஸ்வாசிகா, பீனா ஆண்டனி, அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியாக பீனா ஆண்டனியும், இரண்டாவது குற்றவாளியாக மனோஜூம், மூன்றாவது குற்றவாளியாக ஸ்வாசிகாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications