Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் போலி செய்தி வெளியிட்டதாக ஆளும் கட்சி எதிர்ப்பு.. முன்னணி டிவி அலுவலகத்தில் போலீஸ் சோதனை

கேரளாவில் ஏசியா நெட் சேனல் அலுவலகத்தில் இன்று அம்மாநில போலீசார் சோதனை நடத்தினர்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆசியா நெட் சேனல் அலுவலகத்தில் இன்று அம்மாநில போலீசார் சோதனை நடத்தினர். கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் சேனல் அலுவலகத்திற்குள் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான எஸ்.எப்.ஐ நுழைந்து ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் இன்று சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்று ஆசியா நெட். இந்த தொலைக்காட்சியில் அண்மையில் மாநிலத்தில் போதை பொருள் புழக்கம் தொடர்பான செய்தி ஒளிபரப்பானது. அத்துடன் வடக்கு கேரளாவில் உள்ள பள்ளி மாணவிகள் 10 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

இதற்கு கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆளும் கட்சியின் மாணவ அமைப்பான எஸ்.எப்.ஐ யை சேர்ந்த இளைஞர்கள் கோழிக்கோடு நகரத்தில் உள்ள ஆசியா நெட் அலுவலகத்திற்கு நுழைந்து தங்கள் எதிர்ப்பை காட்டியதாகவும் கூறப்படுகிறது.

சேனல் ஊழியர்களுக்கு மிரட்டல்?

சேனல் ஊழியர்களுக்கு மிரட்டல்?

மேலும் ஆசியா நெட் அலுவலத்தில் இருந்த ஊழியர்களை மிரட்டியதாகவும் ஆசியா நெட் சேனல் குற்றம் சாட்டியது. ஆசியா நெட் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், எஸ்.எப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் இரவு 8 மணியளவில் ஆசியா நெட் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். சேனலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு அலுவலகத்தின் செக்யூரிட்டி ஊழியரை தள்ளி விட்டதோடு, சேனல் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டு இருந்தது.

 கேரள போலீசார் சோதனை

கேரள போலீசார் சோதனை

ஆசியா நெட் சேனல் அளித்த புகாரின் பேரில் எஸ்.எப்.ஐ அமைப்பை சேர்ந்த 30 பேர் மீது கேரள போலீசார் வழக்கும் பதிவு செய்து இருந்தனர். ஆசிய நெட் சேனலுக்குள் எஸ்.எப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் நுழைந்து மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த இரண்டு தினங்கள் ஆகியுள்ள நிலையில், இன்று ஆசியா நெட் சேனல் அலுவலகத்தில் கேரள போலீசார் சோதனை நடத்தினர். இது தொடர்பான தகவலை ஆசியா நெட் சேனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஊடக அமைப்புகள் கண்டனம்

ஊடக அமைப்புகள் கண்டனம்

அந்த பதிவில், "எஸ்.எப்.ஐ அமைப்பின் அடாவடித்தனத்திற்கு மறு நாளே கேரள போலீஸ், கோழிக்கோட்டில் உள்ள ஆசியா நெட் சேனலில் சோதனை மேற்கொண்டது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஏசியா நெட் உண்மையான தகவலை துணிச்சலுடன் வெளியிடும்" என்று பதிவிட்டு இருந்தது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் கேரள போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக பினராயி விஜயன் அரசை கடுமையாக சாடியுள்ளார். கேரள போலீசாரின் இந்த சோதனைக்கு ஊடக அமைப்புகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

மாணவ அமைப்பு அறிக்கை

மாணவ அமைப்பு அறிக்கை

வடக்கு கேரளாவில் பள்ளி மாணவிகள் 10 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக போலியான செய்தியை உருவாக்கியதாக ஆசியா நெட் சேனலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே, கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான எஸ்.எப்.ஐயின் எர்ணாகுளம் மாவட்ட கமிட்டி, தங்கள் செயலை நியாயப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேரணி நடத்தப்பட்டது

பேரணி நடத்தப்பட்டது

அதில், போலியான செய்திகளை வெளியிட்டதற்கு எதிராக தொலைக்காட்சி அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது என்று கூறியுள்ளது. கேரளாவில் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களை ஆளும் கட்சியின் மாணவ அமைப்பினர் மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டும் அதைத்தொடர்ந்து தொலைக்காட்சி அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தியிருப்பதும் ஆளும் அரசுக்கு எதிராக விமர்சனங்களையும் கிளப்பி விட்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+