போஸ்ட்மார்ட்டம் செய்து பார்த்தோம்.. தாங்க முடியவில்லை.. ஷாக் தந்த யானையின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் கொல்லப்பட்ட யானையின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதுகுறித்து பேட்டி அளித்துள்ளனர்.
Recommended Video
கேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து மர்ம நபர்கள் கொடுத்ததில், அந்த யானை துடி துடித்து இறைந்து .
நதியில் நின்றபடி அந்த யானை உயிரை விட்டு இருக்கிறது. கேரளாவில் மன்னார்காடு காட்டுப்பகுதியில் உள்ள பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது .

பிரேத பரிசோதனை அறிக்கை
இந்த நிலையில் கேரளாவில் கொல்லப்பட்ட யானையின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் இந்த யானைக்கு மூச்சு குழல் உள்ளே தண்ணீர் சென்றுள்ளது. தொண்டை வழியாக மூச்சுக்குழல் உள்ளே தண்ணீர் சென்றுள்ளது. இதனால் asphyxia எனப்படும் மூச்சு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதயம் செயல்படுவது நின்று மரணம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

என்ன பேட்டி
இது தொடர்பாக காட்டு விலங்கு மற்றும் கால்நடை அலுவலக மருத்துவர் டேவிட் ஆப்ரஹாம் பேட்டி அளித்துள்ளார். இவர்தான் அந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்தது. பிரேத பரிசோதனை தனக்கு பெரிய அதிர்ச்சி அளித்ததாக அவர் கூறியுள்ளார். அதில், நான் இதுவரை 250 யானைகளுக்கு பிரேத பரிசோதனை செய்து இருக்கிறேன். ஆனால் இப்படி ஒன்றை பார்த்தது இல்லை.

சந்தேகம் வந்தது
முதல் முறை யானைக்கு பிரேத பரிசோதனை செய்யும் போது கண்ணீர்விட்டு உடைந்து போய் இருக்கிறது. அந்த யானையின் குட்டி மிக சிறியதாக இருந்தது.அதை கையில் ஏந்தியதும் கண்ணீர் விட்டுவிட்டேன். இதற்கு முன் சில யானைகள் வெடி கொடுத்து கொல்லப்பட்டுள்ளது. சில யானைகள் மண்ணெய் கொடுத்து கொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த யானை எல்லாம் இப்படி காட்சி அளிக்கவில்லை.

பெரிய அதிர்ச்சி
ஆனால் இந்த யானை வாய் கிழிந்து மிக மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. யானையின் மூச்சு குழல் முழுக்க கிழிந்து இருந்தது. இந்த மோசமான எரிச்சல் தாங்காமல் யானை தண்ணீருக்குள் இறங்கி இருக்கிறது. உடலில் ஏற்பட்ட எரிச்சலை தாங்கிக்கொள்ள முடியாமல் தண்ணீரில் யானை நின்று இருக்கிறது. இதன் வயிற்றுப்பகுதி மோசமாக சேதம் அடைந்து இருக்கிறது.

எரிச்சல்
அந்த யானை இறக்கும் முன் கண்டிப்பாக பெரிய அளவில் கஷ்டத்தை அனுபவித்து இருக்கும். அது எப்படி அமைதியாக நீருக்கும் போனது. எப்படி மதம் பிடிக்கமால் இருந்தது என்று எனக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. உடலில் குட்டி யானை இருந்த காரணத்தால் ஒருவேளை மதம் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதன் மரணம் எனக்கு பெரிய துயரம் அளிக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications