விழிஞ்சத்தில் நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம்.. நாட்டுக்காக அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் ரூ. 8,867 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சர்வதேச துறைமுகத்தின் தொடக்க விழா நடைபெற்ற. இந்த துறைமுகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். பிரதமர் வருகையை முன்னிட்டு விழிஞ்சத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் நாட்டின் முதல் சர்வதேச தானியங்கி துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. அதானி குழுமத்துடன் இணைந்து ரூ. 8,867 கோடி மதிப்பில்கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகம் கடந்த ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், விழிஞ்சம் துறைமுகத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. தானியங்கி துறைமுகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலமாக பிரதமர் மோடி நேற்று மாலை 7.35 மணியளவில் திருவனந்தபுரம் வந்தடைந்தார். கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடி தங்க வைக்கப்பட்டிருந்தார்.
விழாவையொட்டி, எம்எஸ்சி நிறுவனத்தின் செலஸ்டீனோ மரெஸ்கா எனும் மிகப்பெரிய கப்பல் விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்துள்ளது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விழிஞ்சத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழிஞ்சம் துறைமுகத்தின் தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் விழிஞ்சம் சென்றடைந்தார்.
இந்த விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications