பிரமாண்ட பேரணி.. வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி!
திருவனந்தபுரம்: வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி இந்த தொகுதியின் வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்று எம்பியானார். இதனை தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் வயநாடு+ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று எம்பியானார். ஆனால் ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே எம்பியாக இருக்க முடியும் என்பது விதி. எனவே, வயநாடு தொகுதி எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

ராஜினாமா அறிவிப்பு வந்த உடனேயே பிரியங்கா காந்தியை இந்த தொகுதியில் நிறுத்துவது என்று கட்சி தலைமை முடிவு செய்தது. அதன்படி, பிரியங்கா காந்தி இந்த தொகுதியின் வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
ராகுல் காந்தி எம்பியாக போட்டியிட்டபோது, வயநாட்டில் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டிருந்தார். எனவே, இந்த தொகுதிக்கு ஏற்கெனவே பரிட்சயமானவராக பிரியங்கா இருக்கிறார். மட்டுமல்லாது இந்த தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால், பிரியங்கா நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
அரசியல் நிகழ்வுகளில் பிரியங்கா பங்கேற்றிருந்தாலும், தேர்தல் அரசியலில் அவர் நுழைவது இதுவே முதன்முறையாகும். அந்த வகையில் இன்று பிரியங்கா காந்தி வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவு நவ.28ம் தேதி அறிவிப்பாகிறது.
பிரியங்காவை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் களமிறக்கப்படுகிறார். வயநாடு தொகுதி காங்கிரஸ் எப்போதும் ஒரு ஆப்ஷனாகவே வைத்திருப்பதாக பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. பாஜக மட்டுமல்லாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டி உருவாகியுள்ளது. இந்த முறை யு.ஆர். பிரதீப் சிபிஐ சார்பில் போட்டியிடுகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications