கல்யாண மாலை கொண்டாடும் தங்க மங்கை.. கணவருக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறிய பி.டி.உஷா!
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற இந்திய தடகள வீராங்கனை பி.டி. உஷா தனது 30 வது திருமண ஆண்டு விழாவை ஞாயிற்றுக்கிழமை (25.04.2021) அன்று கொண்டாடினார்.
அதையொட்டி தனது கணவரை தன்னுடைய வெற்றிக்கு "பின்னால் இருப்பவர்" என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.இந்த டீவீட்டுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

பி.டி. உஷாவின் ட்வீட்
ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பதை நாம் எப்போதும் கேள்விப்படுகிறோம். இன்று எனது எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் இருக்கும் மனிதனைப் பாராட்டுகிறேன்! சரியான ரிலே அணியை ஒரு ஸ்பிரிண்டிற்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் மராத்தானுக்கும் போதுமானதாக மாற்றியமைக்கு நன்றி! 30 ஆண்டுகால ஒற்றுமையைக் கொண்டாடுகிறேன்! "என்று அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்

பிறப்பு
பி. டி. உஷா என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் "பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா" அவர்கள், 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள "பய்யோலி" என்ற இடத்தில் பைத்தல் என்பவருக்கும், இலட்சுக்கும் மகளாகப் பிறந்தார்.

தங்க மங்கை
1985 மற்றும் 1986 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவராக விளங்கியவர். இந்த சாதனையை இதற்கு முன்பும், இதற்கு பின்பும் வேறு எந்த இந்தியரும் படைக்கவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்ததால் இவர் "இந்திய தடகளங்களின் அரசி" எனவும், 'இந்தியாவின் தங்க மங்கை' எனவும், "பய்யொலி எக்ஸ்பிரஸ்" எனவும் வர்ணிக்கப்படுகிறார்.

இல்லற வாழ்க்கை
சுமார் 28 வயது வரை விளையாட்டு மட்டுமே வாழ்க்கைத் துணை என்று பயணித்த பி. டி. உஷா அவர்கள், 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாள் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்த சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சீனிவாசன் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். திருமணத்திற்குப் பிறகு, சுமார் 3 ஆண்டுகள் விளையாட்டில் பங்கேற்காமல் இருந்த அவர், தன்னுடைய கணவர் அளித்த ஊக்கத்தின் காரணமாக மீண்டும் போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.

பி.டி.உஷா பெற்ற பட்டங்கள்
சுமார் 20 ஆண்டுகளாகத் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பல சாதனைகளைப் படைத்து, இந்திய விளையாட்டுத் துறைக்கு அறிய பங்காற்றிய அவரை கௌரவிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு "பத்மஸ்ரீ" மற்றும் "அர்ஜுனா" விருதுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய ரயில்வே துறையில் அதிகாரி அளவிலான பணியையும் வழங்கி கௌரவித்தது.

ஓய்வு
காலில் தொடர்ந்து அவருக்கு வலி ஏற்பட்டதன் காரணமாக, ஓய்வு எடுத்துகொள்ள முடிவு செய்த அவர், ஜூலை 25, 2000-ல் தனது 36வது வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தனது அதிவேக ஓட்டத்தின் மூலம் விளையாட்டுத் துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இந்தியத் தடகள விளையாட்டுகளில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார் திருமதி பி.டி .உஷா அவர்கள்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications