குளத்தில் கால் கழுவிய ஜாஸ்மின் மன்னிப்பு.. குருவாயூர் கோயிலில் இன்று பரிகார பூஜை! தேவஸ்தானம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் குருவாயூர் கோயில் குளத்தில் தடையை மீறி இளம்பெண் ரீல்ஸ் எடுத்ததை தொடர்ந்து இன்று பரிகார பூஜைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.. குருவாயூரின் புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் புனித குளத்தில் இன்று சுத்திகரிப்பு சடங்கு நடத்தப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதையொட்டி, இன்று காலை முதல் மதியம் வரை தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தேவஸ்தானம் சொல்வது என்ன?

பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் வளாகத்தில், வீடியோ, போட்டோ எடுக்க கேரள ஹைகோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ளது.. மேலும் இந்துக்கள் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்கள் செல்லவும் தடை உள்ளது.

Guruvayur temple pond Jasmine devasthanam

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த தடையை மீறி ஜாஸ்மின் ஜாபர் என்ற இளம்பெண் கோயில் குளத்தில் ரீல்ஸ் எடுத்துள்ளார்.. அதாவது, புனித குளத்தில் கால் கழுவுவதை காட்டும் ஒரு ரீல்ஸ் எடுத்து, அதை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டார்.. இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாகிவிட்டது..

மன்னிப்பு கேட்ட ஜாஸ்மின்

இது மத விதிமுறைகளை மீறும் செயல் என்று கண்டிக்கப்பட்டு பொதுமக்களின் கொந்தளிப்புக்கு வழிவகுத்தது. இது தொடர்பாக குருவாயூர் கோயில் நிர்வாக அதிகாரி அருண்குமார் போலீசில் புகார் செய்தார்.

திருவிழா காலங்களில் ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறும் புனிதமான குளத்தில், வேற்று மதத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய கால்களை கழுவியும், குளத்தின் படிக்கட்டுகளில் நின்று கொண்டு போஸ் கொடுத்தும் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஜாஸ்மின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, குருவாயூர் போலீசார் ஜாஸ்மின் மீது வழக்கு பதிவு செய்தனர்... இதனிடையே, ஜாஸ்மின் ஜாபர் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

கட்டுப்பாடுகள் குறித்து தனக்குத் தெரியாது.. நான் யாரையும் காயப்படுத்தவோ அல்லது பிரச்சனையை உருவாக்கவோ ஒருபோதும் விரும்பவில்லை. அறியாமையால், நான் ஒரு தவறு செய்துவிட்டேன், புண்படுத்தப்பட்டவர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கை மூலம் ஜாஸ்மின் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இன்று பரிகார பூஜைகள்

இந்நிலையில் குருவாயூர் கோயிலில் பரிகார பூஜைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குருவாயூர் தேவஸ்தானம் நிர்வாகம் தரப்பில் சொல்லும்போது, "குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் புனித குளத்தில் இன்று 26ம்தேதி, சுத்தம் செய்யப்பட்டும் சடங்குகள் நடைபெற உள்ளது. இதை ஒட்டி கோவிலின் தரிசனம் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் வரை கட்டுப்படுத்தப்படுகிறது.

சடங்குகள் முடிந்த பிறகு மாலையில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக் கெள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் மதியம் வரை பூஜைகள் நடத்தப்பட உள்ளதால், இன்று மதியம் வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குருவாயூர் கோயில் நிர்வாகம்,

குருவாயூர் கோயில் நிர்வாகம், கோயில் வளாகத்தின் புனிதத்தன்மை எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மீறல்கள் கடுமையாகக் கையாளப்படும் என்றும் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜாஸ்மினின் இந்த ரீல்ஸ் சம்பவமானது, வழிபாட்டுத் தலங்களில் சமூக ஊடகங்களின் பொறுப்பான பயன்பாடு குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+