கோவில் குளத்தில் கால் கழுவிய இஸ்லாமிய பெண்! சர்ச்சையான வீடியோ.. குருவாயூர் கோவில் எடுத்த முடிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கோவில் குளத்தில் இஸ்லாமிய பெண் விலாக்கர் ஒருவர் கால்களை கழுவியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து கோவிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு குளத்தை சுத்தப்படுத்துவதற்கான சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் ஸ்ரீகிருஷ்ணா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளா மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தான் கோவிலுக்கு இந்து மதத்தை சேராத ஜாஸ்மின் ஜாபர் என்பவர் சென்றார். சோசியல் மீடியாவில் மிகவும் பிலபலமானவர். அதுமட்டுமின்றி பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.
கோவிலில் ஜாஸ்மின் ஜாபர் வீடியோ எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கோவில் குளத்துக்கு சென்ற அவர் கால்களை தண்ணீரில் வைத்து கழுவினார். அதுமட்டுமின்றி கைகளால் தண்ணீரில் வைத்து வீடியோ எடுத்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. இது சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோவை பார்த்தவர்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜாஸ்மின் ஜாபர், இந்து மதத்தை சேர்ந்தவர் இல்லை. இதனால் அவர் எப்படி கோவிலுக்கு சென்று புனித குளத்தில் வீடியோ எடுக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர். மேலும் குளத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறினர். இதையடுத்து கோவில் மற்றும் குளம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஜாஸ்மின் ஜாபர் வந்து சென்றதால் தூய்மைப்படுத்துவதற்கான பூஜைகள் நடத்தப்பட்டது. இதற்காக இன்று காலை 5 மணி முதல் மதியம் வரை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications