பாஜகவுக்கு ஷாக்! மோடியை விட ராகுல் காந்திக்கு அமோக ஆதரவு அலை.. பாரத் ஜோடோ யாத்திரை பயங்கர வீச்சு!
திருவனந்தபுரம்: மனோரமா நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் மோடியை விட ராகுல் காந்திக்கு மிக அதிகமான ஆதரவு மக்கள் மத்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் வெறும் 4 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் தகிக்கத் தொடங்கிவிட்டது. மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேசமயம், பாஜகவை வீழ்த்தி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் பலவும் ஓரணியில் திரண்டுள்ளன.

இந்நிலையில், கேரளாவின் ஆன்லைன் மனோரமா நியூஸ் மற்றும் மும்பையின் Voters Mood இணைந்து கேரளாவில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தின. இந்த கருத்துக் கணக்கெடுப்பில் 28,000 வாக்காளர்கள் கலந்துகொண்டனர். கேரளாவின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் தலா 200 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.
கேரள மக்களின் அதிக ஆதரவு பெற்ற தலைவர்: கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 47.57% பேரும், பிரதமர் மோடிக்கு 19.05% பேரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். முதல்வர் பினராயி விஜயனுக்கு 11.48% பேரும் காங்கிரஸின் கேரள மாநில முகங்களில் ஒருவரான சசி தரூருக்கு 7.81% பேரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
ராகுல் காந்தி: 47.57%
மோடி: 19.05%
பினராயி விஜயன்: 11.48%
சசி தரூர்: 7.81%
கேரளா முதல்வர் பதவி: கேரளாவின் முதலமைச்சராக யார் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பினராயி விஜயனுக்கு 27.5%, காங்கிரஸ் கட்சியின் சசி தரூருக்கு 14.45% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், கே.கே.ஷைலஜாவுக்கு 14.37% பேரும் விடி சதீஷனுக்கு 8.75% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸுக்கு பலன் அளித்துள்ளதா?
பலன் அளித்துள்ளது: 64.34%
பலன் அளிக்கவில்லை: 23.06%
கருத்து இல்லை: 12.06%
மோடி அரசின் செயல்பாடு
மிகவும் நன்றாக உள்ளது: 9.98%
நன்றாக உள்ளது: 17.17%
ஆவரேஜ்: 30.24 %
செயல்பாடு மோசம்: 28.07%
மிக மோசம்: 14.54%
தேசிய எதிர்க்கட்சி கூட்டணியின் செயல்பாடு
மிகவும் நன்றாக உள்ளது: 21.01%
நன்றாக உள்ளது: : 33.95%
ஆவரேஜ்: 25.21%
செயல்பாடு மோசம்: 15.79%
மிக மோசம்: 4.04%
கேரளாவில் மொத்தம் உள்ள 20 லோக்சபா தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி 17 இடங்களில் வெல்லும் என்றும், கேரளாவில் ஆளும் இடதுசாரிகளின் LDF கூட்டணி 3 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கேரளாவில் ஒரு இடம் கூட கிடைக்காது என இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரான ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பியாக இருந்து வருகிறார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 19 இடங்களை வென்றது காங்கிரஸ் கூட்டணி. இந்த முறையும், அங்கு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான அலை வீசி வருவதை இந்த கணிப்பு முடிவு உறுதி செய்துள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications