செய்தியாளர்களே மைக்கை தூக்கிகிட்டு பேட்டி எடுக்க போறப்ப கவனமாக இருங்க.. கேரள முதல்வர் அறிவுரை
திருவனந்தபுரம்: மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேட்டி எடுக்கும் போது கவனமாக இருக்குமாறு செய்தியாளர்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார்.
Recommended Video
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாய் நீர் துளிகள், சளி, தும்மல் , இருமல் மற்றும் அவர் கையை வாய் , கண், மூக்கு பகுதிகளை தொட்டுவிட்டு பிற இடங்கள் ஆகிவற்றின் மூலம் கொரோனா பரவுகிறது,. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூச்சு காற்று நமது முகத்தில் பட்டாலும் அதன் மூலம் பரவும் ஆபத்து உள்ளது. அதாவது தொற்று நோய் போல் பரவும் ஆபத்து உள்ளது.

எனவே தான் அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 28 நாட்கள் வரை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள், குழந்தைகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் விலகியே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அச்சம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், கொரோனா குறித்து நீங்கள் வெளியிட்டு வரும் விழிப்புணர்வு செய்திகள் பாராட்டும் வகையில் இருக்கிறது. நீங்கள் மருத்துவமனைக்கு உள்ளதாக சென்று ரிப்போர்ட் செய்யும் போது கவனமாக இருங்கள். கொரோனா பாதித்தவர்களை பேட்டி எடுப்பதை தவிர்த்துவிடுங்கள். மைக் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால் செய்தியாளர்கள் எச்சரிக்கை இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்றால் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சுமார் 22 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவல் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications