கேரளா லாட்டரி மூலம் பல கோடிகளை அள்ளிய மாநில அரசு.. பெருத்த ஏமாற்றம் அடைந்த வின்னர்.. போச்சே

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஓணம் பம்பர் முதல் பரிசு தொடர்ந்து 2வது முறையாக கேரளாவை சேர்ந்தவர்களுக்கு கிடைக்காமல் வெளிமாநில நபர்களுக்கு கிடைத்துள்ளதால் மலையாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த முறை தமிழகத்தை சேர்ந்தவர் முதல் பரிசை வென்றார். இந்த முறை ஓணம் பம்பர் முதல் பரிசான 25 கோடி ரூபாயை கர்நாடகாவை சேர்ந்த அல்தாப் வென்றுள்ளது.. அவர் லாட்டரியை வென்று இருந்தாலும்... உண்மையில் ஓணம் பம்பர் அடித்தது என்னவோ கேரளா மாநில அரசுக்குத்தான்.

வழக்கம் போல் இந்த முறையும் ஓணம் பம்பர் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்துள்ளது. ஓணம் பம்பரில் அதிக டிக்கெட் விற்க முடியாவிட்டாலும், அரசுக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே லாட்டரித் துறையினரால் ஓணம் பம்பராக 80 லட்சம் சீட்டுகள் அச்சிடப்பட்டன.

kerala lottery

இதில் 71.43 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய். சீட்டு விற்பனை மூலம் மட்டும் லாட்டரி துறைக்கு ரூ.357.15 கோடி கிடைத்துள்ளது. இந்த முறை ஓணம் பம்பர் மொத்தப் பரிசுத் தொகை ரூ.125 கோடி. இதில் சுமார் 55 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளன. இது போக.. டிக்கெட் விற்பனை, கமிஷன் மற்றும் பங்கு மூலம் 112.5 கோடி அரசுக்கு வந்துள்ளது. அரசாங்கத்திற்கு 60.71 கோடி ஜிஎஸ்டி மூலம் கிடைத்துள்ளது.

கேரளா லாட்டரி துறையின் நிகர லாபமாக 38.76 கோடிகள் கிடைக்கும். வருமான வரி மற்றும் செஸ் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 24 கோடி ரூபாய் கிடைக்கும், ஆனால் அதில் சுமார் 10 கோடி ரூபாய் கேரளாவுக்கு மாநில பங்காக திரும்ப கிடைக்கும். மொத்தமாக கூட்டி கழித்து பார்த்தால்.. ஓணம் பம்பர் மூலம் மட்டுமே அரசின் கருவூலம் சுமார் ரூ.109.47 கோடியை நிரப்பி உள்ளது.

கேரளா மாநிலத்தின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்று லாட்டரி. கடந்த ஆண்டு லாட்டரி விற்பனை மூலம் அரசுக்கு ரூ.11825 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை லாட்டரி மூலம் அரசுக்கு ரூ.4560 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது செப்டம்பர் மாதத்திற்கான எண்ணிக்கை மற்றும் ஓணம் பம்பர் எண்ணிக்கையைத் தவிர்த்து பதிவு செய்யப்பட்ட வருவாய் மட்டுமே.

ஏமாற்றம்: மாநில அரசுக்கு அதிகமாக கிடைத்தாலும்.. வெற்றி பெற்றவருக்கு பெரிய அளவில் கிடைக்காது. வெற்றிபெற்றவரின் பரிசுத் தொகைக்கு நிறைய deduction செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில், லாட்டரி முகவர்களுக்கு 10% கமிஷன் பிடித்தம் செய்யப்படும். முதல் பரிசு வென்றவர் ₹ 25 கோடியை வென்றால், ₹2.5 கோடி கழிக்கப்படும். பின்னர், 6.75 கோடி ரூபாய் அரசுக்கு செல்லும்.. அதாவது 30% மாநில வரி விதிக்கப்படும்.

இந்த விலக்குகளுக்குப் பிறகு, பரிசுத் தொகை ₹15.75 கோடியாகக் குறையும். ₹5 கோடிக்கு மேல் வருமானம் உள்ள வெற்றியாளர்களுக்கு வருமான வரியில் கூடுதலாக 37% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். இந்த வழக்கில், கூடுதல் கட்டணம் ₹2.49 கோடியாக சரியும். மேலும், மொத்த வரியில் (₹9.24 கோடி) 4% சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் கூடுதலாக ₹36,99,000 சேர்க்கப்படும்.

மொத்தத்தில், ₹25 கோடி பரிசு வென்றவர் தோராயமாக ₹12.11 கோடி deductionயை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், அவர்களுக்கு இறுதித் தொகை ₹12.88 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் முதல் பரிசு பெற்றவர் யார் என்று தெரியாத காரணத்தால்.. கேரளாவில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+