Vedan: ராப் பாடகர் 'வேடன்' குறித்து அவதூறு! ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகையின் ஆசிரியர் கைது! கேரளாவில் சலசலப்பு
திருவனந்தபுரம்: தலித் ராப்பராக அறியப்படும் 'வேடன்' எனும் ஹரிதாஸ் முரளிக்கு எதிராக, வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளிப்படுத்தியதாக கூறி ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆதரவு பத்திரிகையாக அறியப்படும் 'கேசரி' இதழின் ஆசிரியர் என்.ஆர். மது கைது செய்யப்பட்டிருக்கிறார். இது கேரளாவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டம் கிழக்கு கல்லடா பகுதியின் சிபிஎம் செயலாளர் வேலாயுதன் இது தொடர்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர்.

உள்ளூர் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய என்.ஆர்.மது, வேடன் குறித்து பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, "வேடன் தனது பாடல்கள் மூலம் சாதி அடிப்படையிலான தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார். அவரது பேச்சுக்கள் சாதி குறித்து எதிர்மறையான கருத்துக்களை உருவாக்குகிறது. அவர் பரப்ப நினைப்பது நச்சு கலை. நாட்டை துண்டாட நினைப்பவர்கள் இவருக்கு நிதியுதவி செய்கின்றனர்" என்று கூறியிருந்தார்.
இது குறித்துதான் வேலாயுதன் புகார் அளித்திருந்தார். புகாரையடுத்து மதுவை போலீசார் கைது செய்திருந்தனர். தற்போது ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் சங் பரிவார அமைப்புகள் தொடர்ந்து வேடனின் பாடல்களுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்த பாடல்கள் இந்து சமூகத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்துகிறது என்றும், அவரது பாடல்களை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், வேடனின் பாடல்கள் கேரளாவின் சமூக நீதி போராளியாக அறியப்படும் அய்யன்காளி உள்ளிட்டோரின் கருத்துக்களை பரப்புவதாக இடதுசாரிகளும், தலித் செயற்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.
என்னதான் வேடனுக்கு இடதுசாரிகள் சப்போர்ட் செய்தாலும், அரவது ஆதரவாளர்கள் இடதுசாரிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் இடதுசாரி அரசு, சாதி பிரச்சனைகளை 'அடையாள அரசியல்' என்று ஒதுக்கி வைத்துவிட்டதே தவிர, இதற்கான தீர்வை காணவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர்.
ஒரு காலத்தில் தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் தனித்தனி அமைப்புகளை பாஜக, காங்கிரஸ் உருவாக்கியபோது அதை சிபிஎம் விமர்சித்திருந்தது. இப்போது அந்த கட்சி, தங்களுக்கு என தனித்தனி அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் சிபிஎம் காலம் நடந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இந்த முட்டல் மோதல்களை தீவிரப்படுத்தும் விதமாக, புலி பல்லை வைத்திருந்தார், போதை பொருளை பயன்படுத்தினார் என்று பல வழக்குகளை மாநில அரசு வேடன் மீது போட்டிருந்தது. இந்த வழக்குகளில் அவரை கைதும் செய்திருந்தது. இதற்கு நடுவே கேசரி' இதழின் ஆசிரியர் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
கேரளாவை கடந்து தமிழ்நாட்டிலும் வேடனுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்திருக்கின்றன. திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் வேடனின் பாடல்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications