Actor Jayaram: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு! நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத் துறையினர் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு எழுந்துள்ளது.
இதற்கு முன்னர் இந்த வழக்கில், நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் ஜெயராமின் சென்னையில் உள்ள வீட்டில் வைத்து விசாரணையும் செய்திருந்தனர்.

இந்த வழக்கு சபரிமலை கோயிலில் துவார பாலகர் சிலைகளுக்குத் தங்க முலாம் பூசும் பணி நடந்தபோது ஏற்பட்ட முறைகேடு தொடர்பானது. மொத்தம் 42.8 கிலோ எடையுள்ள தங்கம், சென்னையில் செப்பனிடப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்டபோது 38 கிலோவாகக் குறைந்தது. இதன்மூலம் சுமார் 4.5 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாகத் தீவிர குற்றச்சாட்டு எழுந்தது.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அம்மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்படப் பதினொரு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்க முலாம் பூச்சுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்ட கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. செப்பனிடும் பணிக்காகக் கொண்டுவரப்பட்ட தங்கக் கவசங்கள், சென்னை அசோக் நகரில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும், அதற்கான காணொளிக் காட்சிகளும் புலனாய்வுத் துறையினரிடம் சிக்கின.
இவ்வழக்கு தொடர்பாக திருவனந்தபுரத்தில் உன்னிகிருஷ்ணனிடம் பத்து மணி நேரம் தொடர் விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரைக் கைது செய்தது. உன்னிகிருஷ்ணன் போத்தி உள்ளிட்ட பத்து பேர் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலை தங்கத் திருட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அண்மையில் விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி 30-ஆம் தேதி, சென்னையில் உள்ள ஜெயராமின் இல்லத்தில் வைத்து இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
அப்போது நடிகர் ஜெயராம் தனது வாக்குமூலத்தில், "நான் 40 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வருகிறேன். இதன் காரணமாக, கோயிலின் முக்கிய பிரமுகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. துவார பாலகர் சிலைகள் மற்றும் கருவறை கதவுகளில் இருந்த தங்கக் கவசங்களைச் சீரமைத்து மெருகூட்ட சென்னைக்கு எடுத்து வந்ததாக உன்னிகிருஷ்ணன் என்னிடம் கூறினார்" என்று தெரிவித்தார்.
மேலும், "அந்த நகைகளை உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்" என்று உன்னிகிருஷ்ணன் கூறியதாக ஜெயராம் தெரிவித்தார். உன்னிகிருஷ்ணன் கூறியதை நம்பி, தனது வீட்டில் பூஜை செய்ததாகவும், ஆனால் அவை திருட்டு நகைகள் என்பது தனக்குத் தெரியாது என்றும் ஜெயராம் விளக்கமளித்தார். சபரிமலைக்குத் தொடர்ந்து சென்று வந்த பழக்கத்தால் அவரை நம்பியதாகவும், இந்த பூஜைக்காக தான் அவருக்கு எந்தப் பணமும் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஐயப்பன் கோயில் கருவறைக்குச் சென்று வழிபட அவர் தனக்கு உதவி செய்ததாகவும் ஜெயராம் தெரிவித்தார்.
"நகை திருட்டுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மகரவிளக்கு பூஜையின்போதுதான் அவர் தனக்கு அறிமுகமானார். 'ஸ்மார்ட் கிரியேஷன்' நிறுவனத்தில் நடந்த ஒரு பூஜை நிகழ்ச்சியில், உன்னிகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் தான் கலந்துகொண்டதாகவும், அவருக்கும் தனக்கும் எந்தவித நிதிப் பரிவர்த்தனைகளும் இல்லை" என்றும் ஜெயராம் தனது வாக்குமூலத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜெயராமை கொச்சி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனராம். இதனால் அவர் வரும் நாட்களில் கொச்சி அலுவலகத்தில் ஆஜராவார் என தெரிகிறது. உன்னிகிருஷ்ணன் போத்திக்கு இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் ஜெயராமுக்கு நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications