அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா..இன்று மகர ஜோதி தரிசனம்! எங்கு நின்று பார்த்தால் ஜோதியை காண முடியும்?
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி பூஜையான மகர விளக்கு பூஜை இன்று நடைபெறவுள்ளது. பொன்னம்பல மேட்டில் காணக்கிடைக்கும் மகரஜோதியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கியுள்ள நிலையில், எங்கே நின்று பார்த்தால் மகர ஜோதியை தரிசிக்கலாம் என்பது குறித்தான அறிவிப்பை சபரிமலை தேவசம்போர்டு கூறியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிமேலியில் பேட்டை துள்ளி காட்டுப் பாதை வழியாக பெருவழிப்பாதையிலும், பம்பையில் குளித்து விட்டு சன்னிதானம் செல்லும் சிறு வழிப் பாதை வழியாகவும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி நிறைவடைந்தது. இதை அடுத்து டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெற இருக்கும் நிலையில் பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை காண அதிக அளவில் பக்தர்கள் கூடியுள்ளார். ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சன்னிதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் மகரஜோதிக்காக திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது. பெருவழிப்பாதையை கடந்து இன்று சன்னிதானம் வந்தடைகிறது. தொடர்ந்து ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்க உள்ளது.
இன்று மாலை 6:30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதை அடுத்து பெரியானை வட்டம், சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கி உள்ளன.ர் ஏற்கனவே பம்பை, சன்னிதானம், மரக்கூட்டம், சரங்குத்தி, நடை பந்தல் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் திருவாபரண ஊர்வலம் காரணமாக காலை 10 மணியிலிருந்து பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரண ஊர்வலம் சரங்குத்தியை அடைந்ததற்கு பிறகுதான் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் இன்று ஆன்லைன் முன்பதிவு மற்றும் நிலக்கடலில் ஸ்பாட் புக்கிங் செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் மகரஜோதியை இன்று எந்தெந்த இடங்களில் நின்று காத்திருந்தால் பார்க்கலாம் என்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதன்படி அட்டத்தோடு, அட்டத்தோடு மேற்கு காலனி, இலவுங்கல், நெல்லிமலை, அய்யன்மலை, பம்பையில் மலை உச்சி, மலைஉச்சியின் நடுப்பகுதி, பெரியானை வட்டம், சன்னிதானம் பாண்டிதாவளம், தரிசன காம்ப்ளக்ஸ், அன்னதான மண்டப முன்பகுதி, திருமுற்றத்தின் தெற்கு பகுதி, ஆழி பகுதி, கொப்பரைகலம், ஜோதி நகர், வனத்துறை அலவலகம் முன்பு, குடிநீர் அலுவலகம் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications