ஐயப்பனை வழிபட பெண்கள் வந்தால் நடையை மூடுவோம்... மேல்சாந்தி மிரட்டல்!
Recommended Video

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண்கள் வந்தால் நடையை மூடுவோம் என்று மேல்சாந்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாமா கூடாதா என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். 10 வயதிற்கும் கீழும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு வரலாம் என்ற நடைமுறைக்கு எதிராக அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்க செல்லலாம் என்று தீர்ப்பளித்தது.

இதனையடுத்து கடந்த மாதம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட போது பெண் செயற்பாட்டாளர்கள் 2 பேர் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றார். எனினும் போராட்டக்காரர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டு அவர் பாதுகாப்புடன் திருப்பி அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணி முதல் 10 மணி வரை சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கபடுகிறது. இந்த சிறப்பு பூஜையில் பெண்கள் பங்கேற்கக் கூடாது மீறி பெண்கள் வர முயன்றால் போராட்டம் வெடிக்கும் என்று இந்துஅமைப்புகள் எச்சரித்துள்ளன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே ஐ.ஜி. அஜித்குமாரிடம் மேல்சாந்தி தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை விவரித்துள்ளார். சபரிமலைக்குள் பெண்கள் வர முயன்றால் நடையை மூடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications