திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசியில் கேரளாவிற்கும் இந்த நிலைமையா?.. உ.பி, பீகாரில் நடந்த அதே அரசியல்.. சபரிமலை போராட்டம்!

கேரளாவில் சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அம்மாநிலத்திற்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    போராட்டத்தை தொடர்ந்து சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு

    திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அம்மாநிலத்திற்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை அங்கு பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.

    அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் அங்கு பதட்டமான சூழ்நிலைதான் நிலவிவருகிறது. அரசு தொடர்ந்து போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது.

    [மலையேறிவிட்டு போராட்டக்காரர்களை பார்த்து பயந்து குடும்பத்துடன் திரும்பிய ஆந்திரா பெண் #sabarimala ]

    கேரளாவின் குணம்

    கேரளாவின் குணம்

    இந்தியாவிலேயே கேரளா அதிக அளவில் மதசார்பற்ற தன்மையை கடைபிடிக்கும் மாநிலமாகும். அந்த மாநிலம் முழுக்க சம அளவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறுஸ்துவர்கள் நிரம்பி இருக்கிறார்கள். அதேபோல் என்ன மதமாக இருந்தாலும் ஓணம் போன்ற அவர்களுக்கான பாரம்பரிய பண்டிகையை, எந்த மத பிளவும் இன்றி கொண்டாடுவார்கள்.

    சேர்ந்தவர்கள் எல்லோரும் பிரிந்தனர்

    சேர்ந்தவர்கள் எல்லோரும் பிரிந்தனர்

    இந்த நெருக்கம் கேரளா வெள்ளத்திற்கு பின் அதிகம் ஆனது. கேரளா வெள்ளம் மனநிலை ரீதியாக மலையாளிகளை அவர்களுக்குள் நெருக்கம் ஆக்கியது. ஆனால், இப்போது சபரிமலையில் பெண்கள் நுழைவை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்ற இரண்டு பிரிவு மக்கள் உருவாகி இருக்கிறார்கள். கடந்த இரண்டு வாரமாக நடந்த போராட்டம் அங்கு பெரிய பிளவை ஏற்படுத்தி உள்ளது.

    இப்போது என்ன நடக்கிறது

    இப்போது என்ன நடக்கிறது

    அதேபோல் இப்போது கேரளாவில் இன்னொருவிதமான செய்திகளும் பொய்யாக பரப்பப்பட்டு வருகிறது. சபரிமலை கோவிலுக்கு செல்ல விரும்பிய இந்து ஆசிரியை ரேஷ்மா ஒரு முஸ்லீம் என்று பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. அதேபோல் கேரளாவில் செய்தி சேகரிப்பவர்கள் கிறுஸ்துவர்கள் என்றும் இந்துத்துவா அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகிறது. இது அங்கு மக்களிடையே சிறிய பிளவை ஏற்படுத்தி உள்ளது.

    மிகவும் பதட்டம்

    மிகவும் பதட்டம்

    இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இடதுசாரிகளின் கோட்டையான கேரளாவில், பாஜக முதல்முறை இவ்வளவு பெரிய எழுச்சியை பெற்றுள்ளது. அதேசமயம் , இந்த போராட்டம் மதக்கலவரத்தில் கொண்டு போய்விட்டுவிட கூடாது என்றும் மக்கள் கருதுகிறார்கள். நேற்று இல்லாமல் இன்றும் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    உத்தர பிரதேசத்தில் முசாபர்நகர், ஷாம்லி பகுதிகளில் 2013ல் நடந்த கலவரமும், பீகாரில் 1989ல் நடந்த பகல்பூர் கலவரமும் இதே போன்றதுதான். போராட்டம் போல ஆரம்பித்து திசை மாறி மதக்கலவரமாக் மாறியது. இத்தனை வருடங்கள் கழித்து கேரளாவில் அதேபோன்ற ஒரு சூழ்நிலை உருவாகும் என்று யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்.

    English summary
    Sabarimala Protest may affect Kerala in very long-term.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X