சன்னதியில் கட்டுங்கட்டி.. திணறுது சபரிமலை! ஐயப்ப பக்தர்களுக்கு தேவசம்போர்டு வைத்த முக்கிய கோரிக்கை!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மட்டும் மண்டல பூஜை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடை திறக்கப்பட்டது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மாலை அணிந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பலியானது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சன்னிதானத்தில் தங்கும் பக்தர்களால் அதிக நெரிசல் ஏற்படுவதாகவும், சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உடனடியாக மலையிலிருந்து கீழே இறங்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சபரிமலை சீசன் தொடங்கிய முதல் இரு வாரங்களில் கூட்டம் அதிகமாகவும், மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையின் போது கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம்.
இடைப்பட்ட நாட்களில் சாதாரணமாகத்தான் பக்தர்களின் எண்ணிக்கை இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு முதல் கார்த்திகை ஒன்றாம் தேதியில் இருந்து கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சபரிமலை
அதுமட்டுமல்லாமல் ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பேர் நாள் ஒன்றுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவு ஸ்பாட் புக்கிங் செய்யாதவர்களுக்கு சன்னிதானத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. அந்த வகையில் தற்போது நாளொன்றுக்கு 90 ஆயிரம் பேர் வரை ஆன்லைன் புக்கிங் மூலம் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை முதல் தற்போது வரை சுமார் 4 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மண்டல பூஜை சீசன்
பக்தர்களின் வசதிக்காக பம்பை சபரிமலை வரை ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கேரளா போலீசார், தன்னார்வலர்கள், தீயணைப்புத் துறையினர், மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட 2000 மேற்பட்ட பணியாளர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் அவ்வப்போது சபரிமலையில் திடீர் திடீரென நெரிசலும் ஏற்படுகிறது. இதை அடுத்து பம்பையில் இருந்து குழுவாக பக்தர்கள் மலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெண் பக்தர் பலி
இந்த நிலையில் கூட்டணி நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பலியானது பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் மூன்று நாளிலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பக்தர்களுக்கும் முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு நிமிடத்திற்கு 8 பக்தர்கள் வரை ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
தேவசம் போர்டு அறிவிப்பு
அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சபரிமலை சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஓய்வெடுப்பது, இருமுடி கட்டுகளை பிரிப்பது என நீண்ட நேரம் தங்கி விடுகின்றனர். இதனால் புதிதாக வரும் பக்தர்கள் ஏற்கனவே இருக்கும் பக்தர்கள் என சபரிமலையில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் தான் பிரச்சனை எழுவதாக கூறும் அதிகாரிகள், சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் ஸ்பாட் புக்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக பக்தர்கள் வருகிறார்கள்.
ஐயப்பன் தரிசனம்
ஏதாவது ஒரு நாளில் பதிவு செய்துவிட்டு விருப்பப்பட்ட நாளில் வருவதால் இந்த பிரச்சனை வருகிறது. அவர்களை திருப்பி அனுப்ப முடியவில்லை. அது மட்டும் அல்லாமல் காட்டுப்பாதைகள் வழியாகவும் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து அந்த நாளில் மட்டுமே சபரிமலைக்கு வரவேண்டும். மேலும் சன்னிதானத்தில் சுவாமி தரிசனம் செய்தவுடன் நெய் அபிஷேகத்தை முடித்துவிட்டு உடனடியாக பக்தர்கள் சன்னிதானத்தை விட்டு கீழே இறங்க வேண்டும். பம்பையில் பிற பூஜைகளை செய்து கொள்ளலாம் என்கின்றனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications