“சாவர்க்கர்” சுதந்திர வீரரா? ராகுல் காந்தி யாத்திரை “பேனரில்” குழப்பம் - தெரியாம நடந்துருச்சாம்

Subscribe to Oneindia Tamil

கேரளா: ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு ராகுல் காந்தி செல்லும் பாதையில் காங்கிரஸ் கட்சியினர் வைத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் பேனரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாவர்க்கர் படமும் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். 14 வது நாளான இன்று கேரளாவில் நடை பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

பயண விபரம்

பயண விபரம்

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.

கேரளாவில் யாத்திரை

கேரளாவில் யாத்திரை

இந்த நிலையில் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தியுடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். அவரது நடைபயணம் குறித்த செய்திகள் இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கின்றன.

பேனரில் சாவர்க்கர்

பேனரில் சாவர்க்கர்

இன்று கேரள மாநில எர்ணாகுளம் சென்ற ராகுல் காந்தியை வரவேற்று அவர் செல்லும் பாதையில் சுதந்திர போராட்ட வீரர்களின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில், ரவிந்திரநாத் தாகூர், மௌலானா அபுல் கலாம் ஆசாத், சந்திர சேகர் ஆசாத் ஆகிய சுதந்திர போராட்ட வீரர்கள் படத்துடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாவர்க்கர் படமும் இடம்பெற்று இருந்தது.

பிரிட்டிங் பிழை

பிரிட்டிங் பிழை

இந்த வீடியோவில் கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பதிவிட்டு விமர்சித்தனர். இதுகுறித்து பாஜகவினர், "சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் என ராகுல் காந்தி தாமதமாக உணர்ந்துவிட்டார்." என்று கூறியுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் அளித்துள்ள விளக்கத்தில் பேனரை அச்சிடுவதில் பிழை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+