கண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் ரெஹனா.. உடம்பில் டிராயிங் வரையும் குழந்தைகள்.. கலை நயமாம்!
சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பதிவிட்ட ஓவியம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது
திருவனந்தபுரம்: என்ன கண்றாவி இது.. அரைநிர்வாண கோலத்தில் ரெஹனா பாத்திமா படுத்திருக்கிறார்.. அவர் உடம்பில் குழந்தைகள் டிராயிங் வரைகிறார்கள்.. இப்படி ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி கடுமையாகன அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது... கேட்டால், கலைநயத்துடன் இதை பார்க்க வேண்டும் என்று பதில் சொல்கிறார் ரெஹனா!
Recommended Video
பொதுவாக எதையாவது பேசி சிலர் சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம்.. ஆனால் சர்ச்சையில் சிக்க வேண்டும் என்றே நினைக்கும் ஒருவர்தான் ரெஹ்னா!
சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் அளித்தபோது, அங்கு மலைஏற சென்றவர்தான் பாத்திமா ரெஹானா.. செயற்பாட்டாளர்.. இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. இதற்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவரை அங்கிருந்து நீக்கிவிட்டனர்.

பிரச்சனை
இப்போது அடுத்த பிரச்சனையில் சிக்கி உள்ளார்.. ஜூன் 19தேதி, ஒரு வீடியோ இவர் யூ-டியூப்பில் ஷேர் செய்தார்.. அதில் அரை நிர்வாண கோலத்தில் படுத்துள்ளார்.. அந்த உடலில் அவருடைய மகனும், மகளும் டிராயிங் வரைகிறார்கள்.. அதற்கு 'பாடி அண்டு பாலிடிக்ஸ்' (#BodyArtPolitics) என்று ஒரு தலைப்பும் போட்டு பகிர்ந்துள்ளார்.

அரை நிர்வாணம்
பாத்திமா அரை நிர்வாணத்தில் இருக்க, சிறு குழந்தைகள் ஓவியம் வரைந்திருந்தனர்.. மேலும் தன் அம்மாவின் உடலை பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது... பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும்" என்று அதில் பதிவிட்டிருந்தார்.

ஆண்கள் உடல்
மேலும், பாலியல், நிர்வாணம் தடைசெய்யப்பட்ட ஒரு சமூகத்தில் பெண்கள் பாலியல் மற்றும் அவர்களின் உடல்களைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை திரும்பவும் வலியுறுத்துவதற்காகவே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆண்களின் உடலுடன் ஒப்பிடும்போது, பெண்களின் உடலும் அவளது நிர்வாணமும் 55 கிலோவுக்கு மேல் சதை.. கால்கள் இருப்பதை கண்டு லெகிங்ஸ் தூண்டப்படுகிறது.

ஆபாசம்
அதே நேரத்தில் ஆண் நின்றால் ஆபாசம் கிடையாது.. இது தற்போது சமூகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தவறான பாலியல் உணர்வுதான்... அழகு பார்ப்பவரின் கண்ணில் உள்ளது.. அது போலவே, பார்ப்பவரின் பார்வையில் ஆபாசமும் உள்ளது" என்று இதற்கு விளக்கமும் தந்திருந்தார்.. அந்த வீடியோ பேஸ்புக்கில் பெரும் வைரலானது

வழக்கு பதிவு
தொடர்ந்து கேரளாவில் சர்ச்சையும் வெடித்தது. இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் திருவல்லா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது... ரெஹானா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

குற்றத்தன்மை
பாத்திமாவின் இந்த செயல் குறித்து மனநல டாக்டர் சிஜே. ஜான் சொல்லும்போது," ஒரு அம்மா, மற்றும் அவரது குழந்தைகள் சம்பந்தப்பட்ட கலை தொடர்புகளில் எந்தவிதமான ஆபாசத்தையும் காணவில்லை. இது ஒரு தனிப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால் பரவாயில்லை... ஆனால், அதை வீடியோவாக்கி பப்ளிக் பார்க்கும்படி பொதுவெளியில் விடும்போதுதான் பிரச்சினையே வெடிக்கிறது.. ஒரு பெரியர், 2 சின்ன குழந்தைங்க இருக்காங்க. பெரியவர் என்ன செய்கிறார்கள் என்பதைகூட தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியாத பருவம் இது.. இப்படி செயல்பட வைப்பது குற்றத்தன்மையுடையாகி விடுகிறது'' என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications