போலி எக்ஸ்பீரியன்ஸ் சான்றிதழ்.. SFI மாணவர் அமைப்பு முன்னாள் தலைவர் கைது! கேரளாவில் பரபரப்பு
திருவனந்தபுரம்: போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு விண்ணப்பித்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரை கேரள காவல்துறை கைது செய்து இருக்கிறது.
கேரள மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர் சங்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக எஸ்.எஃப்.ஐ. எனப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பிற்கு அங்கு அதிக செல்வாக்கு உள்ளது. இந்த அமைப்பின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் கே.வித்யா.

இவர் கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் அம்மாநிலத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளராக இவர் பணியாற்றினார். இந்த பணியில் அவர் சேரும்போது போலி பணி அனுபவ சான்றிதழ்களை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு அரசு கல்லூரிகள் அவர் மீது புகாரளித்தன.
அதன்பேரில் அவர் மீது மோசடி, போலி ஆவணங்களை சமர்பித்தல், ஏமாற்றும் நோக்கில் போலிகளை தயாரித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அவரை கைது செய்வதில் கேரள மாநில இடதுசாரி அரசு தாமதம் காட்டுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்டவை குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட உடனே 2 மாதங்களாக எஸ்.எஃப்.ஐ முன்னாள் தலைவர் வித்யாவை காணவில்லை என்றும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் அவரை போலீசார் கைது செய்து உள்ளார்கள்.
அவரை இன்று நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டு இருக்கிறார். தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு நிலுவையில் உள்ள நிலையிலேயே தற்போது அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த மனுவில் அரசியல் நோக்கங்களுக்காகவே தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். குற்றசாட்டுகள் அனைத்தும் குற்றம் செய்ததை நிரூபிக்கவில்லை என்றார்." என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications