Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷரோன் ராஜ் கொலை வழக்கு! ஜூஸில் விஷம் கலந்த கிரீஷ்மா! ஜன.17ல் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழக கேரள எல்லையில் காதலன் ஷாரோனுக்கு காதலி கிரீஷ்மா விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் வரும் 17ஆம் தேதி தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் வழங்குகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரளாவின் பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார்.

kerala sharon raj crime

இந்த நிலையில் இவருக்கு களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த எம்.ஏ. படிக்கும் கிரீஷ்மா (22) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டிற்கு தனது நண்பருடன் ஷாரோன்ராஜ் வந்துள்ளார்.

அங்கு அந்த நண்பர் வெளியே நின்றுக் கொண்டிருந்தார். ஷாரோன் மட்டும் காதலியின் வீட்டுக்குள் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார். தொடர்ந்து நண்பருடன் அவர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது வழியில் நண்பரிடம் ஷாரோன் ராஜ் தனக்கு வயிறு வலிப்பதாக ஷாரோன் ராஜ் கூறினார். ஏன் என நண்பர் கேட்க, காதலி கிரீஷ்மா வீட்டில் கசாயம் மற்றும் குளிர்பானம் குடித்ததாகவும் அதில் இருந்து வயிறு வலிக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரம் ஏதேதோ செய்தும் அவருக்கு வலி கேட்கவில்லை. ஆனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை கொடுத்தும் அவருக்கு வலி நிற்கவில்லை. இதையடுத்து ஷாரோனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஷாரோன் ராஜ் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பலியானார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் ஷாரோன் ராஜுக்கு எடுத்த ரத்த மாதிரிகளில் அவருடைய ரத்தத்தில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. எனினும் அந்த பெண்ணை ஷாரோன் ராஜ் எந்த சூழலிலும் காட்டிக் கொடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து போலீஸார் கிரீஷ்மாவை கைது செய்தனர். அவரும் கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை போலீஸார் காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால் ஷாரோன் ராஜ் இந்த திருமணத்தை நிறுத்த அவருடன் ஊர் சுற்றி போட்டோக்கள், வீடியோக்களை புது மாப்பிள்ளையிடம் காட்டிவிடுவாரோ என்ற அச்சத்தில் இது போல் கொலை செய்ததாக கிரீஷ்மா வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

அவருடைய வீட்டில் இருந்த விஷ பாட்டிலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த வழக்கில் கிரீஷ்மா, தாய் சிந்து, மாமா நிர்மல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஷாரோன் ராஜ் கொலை வழக்கு பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை வழக்கில் வரும் 17ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+