சசி தரூர் சிபிஎம் கட்சியில் ஐக்கியம்? கேரளாவில் காங்கிரஸுக்கு பெரிய இடி? அவரே சொன்ன பதிலை பாருங்க
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், திடீரென பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனைப் பாராட்டிப் பேசியுள்ளார். அவருக்குக் காங்கிரஸ் தலைமையுடன் மோதல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில் சசி தரூர், தான் மாற்று ஆப்ஷன்கள் குறித்தும் யோசித்து வருவதாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் சசி தரூர். இவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் திருவனந்தபுரம் தொகுதியில் எம்பியாக இருக்கிறார். இவருக்கு கட்சியைத் தாண்டியும் மிடில் கிளாஸ் மக்களிடையே வரவேற்பு அதிகம் இருக்கிறது.

சசி தரூர்
அவர் சமீபத்தில் கேரள அரசின் கொள்கைகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டியிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திருந்த நிலையில், அதை சசி தரூர் பாராட்டியிருந்தார். இருப்பினும், காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதற்கிடையே சமீபத்தில் பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய சசி தரூர் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சசி தரூர் இது தொடர்பாகக் கூறுகையில், "என்னை நான் ஒருபோதும் குறுகிய அரசியல் சிந்தனைகள் கொண்ட தலைவராக நினைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி கேரளாவில் புதிய வாக்காளர்களை ஈர்க்க வேண்டும். தனது தளத்தை விரிவுபடுத்த வேண்டும்.. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட காலமாகவே ஒரு வலுவான மாநில தலைவர் இல்லை. அது ஒரு பெரிய சிக்கல் தான். கேரளாவில் உள்ள பல காங்கிரஸ் தலைவர்கள் நான் கூறுவதை ஒப்புக்கொள்கிறார்கள். இங்கு வலிமையான தலைவர் தேவை.
கேரள காங்கிரஸ் தலைவர்
தனியார் அமைப்புகள் நடத்திய சர்வேக்களில் எனக்கு முன்னிலை இருப்பதாகக் கூறியுள்ளனர். மற்ற தலைவர்களைக் காட்டிலும் எனக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதாகக் கூறியுள்ளனர். கேரளாவில் தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே இருக்கிறது. அதற்குள் காங்கிரஸ் தனது ஆதரவு மட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இல்லை என்றால் கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் எதிர்க்கட்சியாகவே காங்கிரஸ் இருக்க வேண்டும்.
காங்கிரஸில் இருந்து விலகல்?
நான் காங்கிரஸ் கட்சிக்காகச் சேவையாற்ற எப்போதும் தயாராகவே இருக்கிறேன். ஆனால், காங்கிரஸுக்கு எனது சேவை தேவையில்லை என்றால் எனக்கு இருக்கும் வேறு ஆப்ஷன்கள் குறித்தும் நான் யோசிக்க வேண்டி இருக்கும். அதேநேரம் தற்போது நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவுள்ளதாகக் கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை. சில விஷயங்களில் எனக்கும் தலைமைக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அதற்காக நான் காங்கிரஸில் இருந்து விலகுகிறேன் எனச் சொல்வதில் உண்மை இல்லை" என்றார்.
சசி தரூர் சமீபத்தில் தான் ராகுல் காந்தியை நேரில் சந்தித்திருந்தார். சுமார் 30 நிமிடங்கள் இரு தலைவர்களும் தனியாக ஆலோசித்தனர். அது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சசி தரூர், "ராகுல் காந்தி உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. 30 நிமிடங்கள் இருவரும் ஆலோசித்தோம். நான் சில முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தேன். இது தனிப்பட்ட முறையில் நடந்த சந்திப்பு என்பதால் என்ன பேசினோம் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதேநேரம் தேர்தல் குறித்தோ கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் குறித்தோ நாங்கள் எதுவும் ஆலோசிக்கவில்லை" என்றார்.
என்ன காரணம்?
சமீபத்தில் சசி தரூர் எழுதிய கட்டுரையில் அவர் கேரள அரசை வெகுவாக பாராட்டி இருந்தார். கேரளாவை ஆளும் சிபிஎம் அரசு, முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதாகவும் சொல்லிப் பாராட்டி இருந்தார். இதுவே பெரும் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்தது. கேரள காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர் கருத்தை நிராகரித்த நிலையில், அவரையும் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications